விபத்து வீடியோவை கேட்ட நெட்டிசன்ஸ்… யாஷிகா ஆனந்தின் நெத்தியடி பதில்!
சென்னை : விபத்து வீடியோ கேட்ட நெட்டிசனுக்கு யாஷிகா ஆனந்த் நெத்தியடி பதிலளித்துள்ளார்.
அவரின் விளாசலா நச் பதிலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மோசமான கேள்வி கேட்ட நெட்டிசனை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
நடிகை யாஷிகா தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த்
பார்ப்பதற்கு மெழுகு சிலைபோல கொழுக்கு மொழுக்குனு அழகா இருப்பவர் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இவர், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2 ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை.

பிக் பாஸில்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்தான் யாஷிகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவசரில் வலம் வந்து இளைஞர்களில் மனதில் இடம் பிடித்தார். அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கியபோதும், வயதை தாண்டிய முதிர்ச்சியுடன் அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

விபத்தில் சிக்கினார்
கடந்த ஜூலை மாதம் நடிகை யாஷிகா தனது தோழி வள்ளிச் செட்டி பவனி மற்றும் இரண்டு நண்பர்களுடன் புதுச்சேரியில் பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது மகாபலிபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் நடிகை யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்தால்
யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்தனர். கால், இடுப்பு என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் பல அறுவை சிகிச்சை, பல மாத ஓய்வுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாகதான் யாஷிகா வெளியில் தலை காட்டி வருகிறார். பழையப்படி தேறியுள்ள யாஷிகா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

நெத்தியடி பதில்
இந்நிலையில்,யாஷிகா பதிவிட்ட போட்டோவை பார்த்த ஒருவர் விபத்து வீடியோகை அனுப்புறீங்களா? Vibe போஸ்ட் போடனும் என கமெண்டில் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா, நீ பிறந்த வீடியோவை அனுப்பு நான், Vibe சென்ட் பண்றேன் என சரியான பதிலடி கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த நெத்தியடி பதிலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு கமெண்டை போட்ட அந்த நெட்டிசனை ஏன்டா இது எல்லாம் தேவையா உனக்கு என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











