அடுத்த இருட்டு அறையில் முரட்டு குத்தா? பிக் பாஸ் யாஷிகா ஆனந்தின் பெஸ்டி டிரைலர் எப்படி இருக்கு?

சென்னை: கார் விபத்துக்கு பிறகு மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வரும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள பெஸ்டி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 பிரபலமான யாஷிகா ஆனந்தின் பெஸ்டி பட டிரைலரை சினிமா பிரபலங்கள் பலர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு வெளியான முருகா படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் யாஷிகா

மீண்டும் யாஷிகா

3 மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கார் விபத்தில் தனது தோழியை இழந்த நடிகை யாஷிகா ஆனந்த் ஏகப்பட்ட காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார். மீண்டும் எழுந்து நடப்போமா மாட்டோமா என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மருத்துவர்களின் உதவியால் 3 மாதங்களில் நடக்க ஆரம்பித்துள்ளார் யாஷிகா. அவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வந்த நிலையில், ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆக போகிறது.

நிரூப்பை சந்தித்த யாஷிகா

நிரூப்பை சந்தித்த யாஷிகா

மீண்டும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து தனது முன்னாள் காதலரான நிரூப்பை சந்தித்து சென்ற தருணங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரேக்கப் ஆகி இருவரும் பிரிந்தாலும் நிரூப் யாஷிகா பற்றி பேசுவதும் யாஷிகாவை பார்த்து உருகியதையும் பார்த்தால் வெளியே வந்த பின்னர் மீண்டும் காதலர்களாகி விடுவார்களோ என்கிற கேள்வியும் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆர்யா முதல் ஆரி வரை

ஆர்யா முதல் ஆரி வரை

ஆர்.எஸ். சினிமா தயாரிப்பில் இயக்குநர் ரங்கா எழுதி இயக்கி உள்ள பெஸ்டி படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், அசோக், மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் மற்றும் லொள்ளு சபா ஜீவா நடித்துள்ள ஹாரர் படமான பெஸ்டி படத்தின் டிரைலரை தற்போது நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி, நடிகர் ஆர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

ஓவர் கவர்ச்சி

ஓவர் கவர்ச்சி

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட பேய் படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் இந்த பெஸ்டி படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாகவே பூர்த்தி செய்துள்ளார் என்பது தற்போது வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

எண்ட் கார்டே இல்லையா

ஹாரர் படங்களை காமெடி படங்களாகவும் கவர்ச்சி படங்களாகவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எடுத்து ரசிகர்களை சோதித்து வரும் நிலையில், இதற்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா? என்கிற கேள்வியை ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X