அஜித் மச்சினனுடன் காதலா? வேகமாக பரவும் வதந்தி..யாஷிகா அம்மா கொடுத்த விளக்கம்!
சென்னை : அஜித் மச்சினன் நடிகர் ரிச்சர்ட், யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக இணையத்தில் பரவிய செய்திக்கு யாஷிகாவின் அம்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் மாஸ் ஹீரோவான அஜித்தின் மைத்துனர் தான் ரிச்சர்ட் ரிஷி.
நடிகரான இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி : நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பின் காதல் வைரஸ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

திரௌபதி படத்தில் : முன்னணி ஹீரோவாக உயர வேண்டும் என போராடி வந்த ரிச்சர்டிற்கு திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மோகன் ஜி இயக்கிய வெளியான இத்திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிச்சர்டின் எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
யாஷிகாவுடன் காதலா? திரௌபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படமும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக ரிச்சர்ட் உருவாகி உள்ளார். சமீபத்தில் ரிச்சர்ட் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
யாஷிகா அம்மா விளக்கம் : இணையத்தில் பரவி வரும் இந்த வதந்தி குறித்து யாஷிகாவின் அம்மா, பிரபல செய்தி நாள் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், இணையத்தில் வரும் பல செய்திகளை நானும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த செய்தி உண்மையில்லை, இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றார். சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரவிய செய்திக்கு யாஷிகாவின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மீண்டும் காதல் சர்ச்சை : கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிரூப்பை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரித்துவிட்டனர். இதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் தெரிவித்திருந்தார். தற்போது யாஷிகா மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











