லோ பட்ஜெட் ஹார்லி குயின்.. பயப்படாதீங்க அது நம்ம யாஷிகா தான்!
Recommended Video
சென்னை: ஹாலோவின் திருவிழா முடிந்து இரு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது நடிகை யாஷிகா ஹாலோவின் கொண்டாடியுள்ளார்.
சூசைட் ஸ்குவாட் படத்தில் வரும் பிரபல ஹார்லி குயின் கதாபாத்திரத்தின் கெட்டப்பில் யாஷிகா காமெடி பேயாக மேக்கப் போட்டுள்ளார்.
அவரது இந்த லுக்கை பார்த்த நெட்டிசன்கள், கமெண்ட்டுகளால் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஆஸ்கர்
வில்ஸ்மித் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான சூசைட் ஸ்குவாட் படத்தில் ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி ஹார்லி குயினாக நடித்து அசத்தியிருப்பார். சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலுக்காக ஆஸ்கர் விருதுகளை அந்த படம் பெற்றுள்ளது. இந்நிலையில், அந்த படத்தில் வரும் பிரபல ஹார்லி குயின் கெட்டப்பில் யாஷிகா ஆனந்த், தனது ஹாலோவினை கொண்டாடியுள்ளார்.
லோ பட்ஜெட் ஹார்லி குயின்
பொதுவாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா ஆனந்த்தை கலாய்க்கவும் ரசிக்கவும் ஒரு கூட்டமே காத்திருக்கும். இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ள யாஷிகா ஆனந்த், இந்த கெட்டப்பில் லோ பட்ஜெட் ஹார்லி குயினாக உள்ளதாக, நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.
என்ன கண்றாவிடா இது
யாஷிகா ஆனந்தின் இந்த லேட் ஹாலோவின் கெட்டப்பை பார்த்த இந்த நெட்டிசன், என்ன கண்றாவிடா இது என பதிவிட்டு, கூடவே யோகிபாபுவின் ரியாக்ஷன் வீடியோ க்ளிப்பையும் பதிவிட்டுள்ளார்.
எத்தனை கொடுமை
இன்னும் எத்தனை கொடுமையை பார்க்கணுமோன்னு வைகை புயல் வடிவேலுவின் ரியாக்ஷன் க்ளிப்பை பதிவிட்டு யாஷிகாவின் பதிவை இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.
யாஷிகா தான் சூப்பர்
ஸாரி மார்கட் ராபி, இந்த கெட்டப்புல உங்களை விட யாஷிகா ஆனந்த் தான் சூப்பரா இருக்காங்க என இன்னொரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். இவரு, புகழ்கிறாரா இல்லை கலாய்க்கிறாரான்னு தான் தெரியல.


Click it and Unblock the Notifications











