குற்ற உணர்ச்சியில் தவிக்கும் யாஷிகா ஆனந்த் ...இப்போ எப்படி இருக்கார் ?

சென்னை : விஜய் டிவி.,யில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புகழடைந்த யாஷிகா, பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தார். பெரும்பாலும் கவர்ச்சி ரோல்களிலேயே நடித்தார்.

Recommended Video

Yashika Anand First EXCLUSIVE statement | 5 மாசம் நடக்க முடியாது | Balaji Murugadoss

தற்போது எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த், கார் விபத்தில் மிக மோசமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் வந்த தோழி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏராளமான எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவிற்கு பல ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டது. தற்போது சுயநினைவிற்கு வந்த உடன் தோழி இறந்த செய்தி யாஷிகாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு கதறி அழுதுள்ளார் யாஷிகா. தனது உணர்வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் யாஷிகா. விபத்திற்கு பிறகு அவர் பதிவிட்டுள்ள முதல் பதிவு இது.

குற்ற உணர்ச்சியில் யாஷிகா

குற்ற உணர்ச்சியில் யாஷிகா

அதில், எனது உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. வாழ்க்கை முழுவதும் நான் குற்ற உணர்ச்சியுடன் தான் இருப்பேன். இந்த மோசமான விபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதிற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை, எனது பெஸ்ட் ஃபிரண்ட்டை என்னிடம் இருந்து பிரித்ததற்காக அவர் மீது பழி சொல்வதா என தெரியவில்லை.

நீ என்னை மன்னிக்க மாட்டாய்

நீ என்னை மன்னிக்க மாட்டாய்

ஒவ்வொரு விநாடியும் உன்னை மிஸ் பண்றேன் பவனி. உன்னால் என்னை மன்னிக்க முடியாது என எனக்கு தெரியும். என்னை மன்னிச்சுடு. நான் உன் குடும்பத்தை மோசமான சூழலில் தள்ளிட்டேன். நான் வாழும் வரை இந்த குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கும். உனது ஆத்மா சாந்தி அடையட்டும். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வர கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன் குடும்பம் என்னை மன்னிக்கும் என நம்புகிறேன். நீ என்னுடன் இருந்த நினைவுகளை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.

பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை

இந்த ஆண்டு நான் என் பிறந்தநாளை கொண்டாட போவதில்லை. என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என எனது ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன். எனது தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அவர்களுக்கு கூடுதல் வலிமையை தரட்டும். எனது வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு. தயவுசெய்து அனைவரும் என்னை மன்னிச்சுடுங்க. இவ்வாறு யாஷிகா குறிப்பிட்டுள்ளார். குற்ற உணர்ச்சி காரணமாக யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்த டிஸ்பிளே ஃபோட்டோவையும் அகற்றி, அந்த இடத்தை காலியாக வைத்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வந்த தோழி

அமெரிக்காவிலிருந்து வந்த தோழி

யாஷிகாவின் தோழி பவனி என்பவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். ஐதராபாத்தை சேர்ந்த அவர் சமீபத்தில் இந்தியா திரும்பி, தனது நண்பர்களை பார்க்க சென்னை வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று கூடிய நண்பர்கள் புதுச்சேரி சென்று விட்டு, மாமல்லபுரத்தில் பார்ட்டி கொண்டாடி உள்ளனர். பிறகு காரில், அதிக சத்தமாக பாட்டு போட்டு ஆட்டம், பாட்டத்துடன் சென்னை திரும்பி உள்ளனர்.

எப்படி விபத்து நடந்தது

எப்படி விபத்து நடந்தது

காரை யாஷிகா தான் ஓட்டி உள்ளார். பவனி முன் சீட்டில் அமர, மற்ற இரு ஆண் நண்பர்களும் பின் சீட்டில் அமர்ந்து வந்துள்ளனர். 140 கி.மீ., வேகத்தில் யாஷிகா காரை ஓட்ட, காரின் முன் சீட்டில் எழுந்து நின்று, திறந்திருந்த சன் ரூஃப் வெளியாக தலைமை வெளியே நீட்டி ஆடியபடி வந்துள்ளார் பவனி. அப்போது காற்றில் பறந்த பவனியில் டிரெஸ் யாஷிகாவின் முகத்தை மறைத்துள்ளது. இதனால் மீடியனில் பலமாக மோதி கார் விபத்திற்குள்ளாகி உள்ளது.

யாஷிகா மீது வழக்கு

யாஷிகா மீது வழக்கு

சன் ரூஃப் வழியாக காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பவனி, ரோட்டில் விழுந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் சில முறை உருண்டு கிடந்துள்ளது. சீட் பெல்ட் அணியாததால் யாஷிகாவிற்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இரு நண்பர்களும் லேசான காயத்துடன் தப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நொருங்கிப் போன யாஷிகா

நொருங்கிப் போன யாஷிகா

யாஷிகாவின் உடல்நிலை கருதி அவரது குடும்பத்தினர், தோழி பவனி உயிரிழந்த தகவலை யாஷிகாவிடம் கூறாமல் இருந்துள்ளனர். ஆனால் யாஷிகா கண் விழித்ததும் முதலில் தனது தோழியை பற்றி தான் கேட்டுள்ளார். தற்போது யாஷிகா ஐசியு.,வில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். சுழ நினைவிற்க வந்த யாஷிகாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தான் தோழி உயிரிழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததால் தான் யாஷிகா இந்த பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி, அவர் விரைவில் குணமடைந்து வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X