அஜித்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லி ரசிகர்களை சாச்சுப்புட்ட யாஷிகா
Recommended Video
சென்னை: யாஷிகா தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜித்தை ஒரு வார்த்தையில் விவரித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அவர் யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்த ஜோம்பி படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் மகத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் முதன்முதலாக ட்விட்டரில் லைவாக வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அஜித்
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது தல தான். அவரை பற்றி ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் அவர் எனக்கு ஒரு ஏஞ்சல். அவருடன் சேர்ந்து படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது.

விருந்தாளி
பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அழைத்தால் நிச்சயம் வருவேன். இந்த சீசன் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். போட்டியாளர்கள் நடிக்காமல் அவர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அறிவுரை.

நயன்தாரா
எனக்கு பிடித்த நடிகைகள் என்றால் அது ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நயன்தாரா ஆகியோர் தான். ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. எங்களை வைத்து படம் பண்ணுங்க என்று இயக்குநர்களிடம் கூறி வருகிறோம்.

விஜய் தேவரகொண்டா
ஒரு பையனை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றால் அது விஜய் தேவரகொண்டா மாதிரி இருக்க வேண்டும். அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலே போதும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். ஆனால் அஜித்தின் தங்கையாக மட்டும் நடிக்க மாட்டேன். வயதான பிறகு அரசியலுக்கு வருவேன் என்கிறார் யாஷிகா.


Click it and Unblock the Notifications











