தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்!

சென்னை: விபத்தில் தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது என்றும் அவர் ஐசியூவில் தான் இருக்கிறார் என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Yashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரியில் இருந்து காரில் தனது நண்பர்களுடன் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்.

யாஷிகாதான் காரை ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே பலி

சம்பவ இடத்திலேயே பலி

இதில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் படுகாயமடைந்தனர்.

ஓட்டுநர் உரிமம் ரத்து

ஓட்டுநர் உரிமம் ரத்து

அவர்கள் மூன்று பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தாயார் உருக்கம்

தாயார் உருக்கம்

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சோனல் ஆனந்த் உருக்கமாக சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது. யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தோழி இறந்தது தெரியாது

தோழி இறந்தது தெரியாது

விபத்தில் யாஷிகாவின் தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தார். அப்போது அவரை வெண்டிலேட்டரில் வைத்திருப்பதாக கூறினோம். மருத்துவர்கள், யாஷிகா இப்போது இருக்கும் நிலையில் அவரிடம் இதுகுறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

நடக்க 2 மாதங்கள் ஆகும்

நடக்க 2 மாதங்கள் ஆகும்

மேலும் சிகிச்சைக்கு பிறகு யாஷிகா 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 மாதங்கள் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றம் கதறியுள்ளார்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

யாஷிகா ஆனந்த் தற்போது இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X