அய்யய்யோ.. ஒரே என்ஜாய் எஞ்சாமி ஃபீவரால்ல இருக்கு.. இது யாஷிகா வெர்ஷன்.. டிரைவிங்லேயே ரகளை!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கார் ஓட்டியப்படியே ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது இவன் தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
போட்டோ வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

என்ஜாய் எஞ்சாமி
அந்த வகையில் அண்மையில் துபாய் சுற்றுலா சென்ற யாஷிகா ஆனந்த் அங்கு ஸ்கை டைவிங் செய்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் இணையத்தை தெறிக்க விட்டு வரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்துள்ளார் யாஷிகா.

பாடலுக்கு ஆட்டம்
ஏற்கனவே நடிகைகள் நஸ்ரியா, ரம்யா, ஆலியா மானசா, ஸ்ருதி ராஜ் என பலரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டு தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தனர். அந்த வீடியோக்கள் வைரலானது.

க்யூட் எக்ஸ்பிரஷன்கள்
இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். காரில் தோழிகளுடன் ஜாலி டிரைவிங் செல்லும் யாஷிகா ஆனந்த், தோழிகளுடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு க்யூட் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.

7 கோடி வியூஸ்
என்ஜாய் எஞ்சாமி இன்டிபென்டன்ட் ஆல்பம், பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரால் பாடப்பட்டது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த பாடல் வெளியானது. இதுவரை 7 கோடியே 89 லட்சம் பேரால் வியூஸ்களை இந்தப் பாடல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











