மலைப்பாம்பை மாலைப் போல் போட்டு.. ஒட்டகத்துக்கு ஊட்டிவிட்டு.. ஷேய்க்குடன் கொண்டாடிய யாஷிகா ஆனந்த்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மலைப்பாம்பை மாலைப்போல் கழுத்தில் போட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில படங்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு பிறகே பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். ஆனால் பெயர் சொல்லும் படி எந்தப் படமும் இதுவரை பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

கேமியோ அப்பியரன்ஸ்
கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார் யாஷிகா ஆனந்த். தற்போது எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தை கலக்கும் வீடியோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் யாஷிகா ஆனந்த் தற்போது ஷேர் செய்திருக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேம் பார்க்
அதாவது, துபாயில் ஓய்வை கழிக்க சென்ற யாஷிகா ஆனந்த் அங்குள்ள விலங்குகள் சரணாலயமான ஃபேம் பூங்காவுக்கு சென்றுள்ளார். ஷேய்க் ஒருவருடன் பார்க்கை சுற்றி பார்க்கும் யாஷிகா, அங்குள்ள விலங்குகளுக்கு தன்னுடைய கையாளேயே உணவு அளிக்கிறார்.

ஒட்டகத்துடன்..
ஒட்டகத்துக்கு இலைகளை உணவாக கொடுக்கும் யாஷிகா தனது வாயில் இலையை வைத்து ஒட்டகத்துக்கு நேரடியாக ஊட்டியுள்ளார். இதேபோல் கரடிகளுக்கும் உணவு வழங்கியுள்ளார் யாஷிகா.

மலைப்பாம்பை..
மேலும் புலியின் வாயில் ஒரு முனை கையிரை கொடுத்து மறுமுனையை பிடித்து இழுத்தும் விளையாடியுள்ளார் யாஷிகா ஆனந்த். அதோடு மலைப்பாம்பை மாலைப் போல் கழுத்தில் போட்டும் கெத்து காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த்.
டபுள் மீனிங் கமெண்ட்
யாஷிகா ஆனந்தின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாஷிகாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











