வைரலாகும் யாஷிகா வீடியோ.. ‘ அயய்யோ நாங்க பாவம்’ என கதறும் நெட்டிசன்ஸ்!
யாஷிகாவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: யாஷிகாவின் புதிய மொக்க ஜோக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால், பிக் பாஸ் சீசன் 2 போட்டியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சீசன் 2 டைட்டில் வின்னர் ஆவதற்குரிய அனைத்து தகுதிகளும் இருப்பதாக கருதப்பட்ட போட்டியாளர்களில் அவரும் ஒருவர். ஆனால், நிகழ்ச்சி முடிய சில நாட்களே இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, அடிக்கடி கேமராவுக்கு முன் சென்று மொக்கை ஜோக்குகள் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார் யாஷிகா. அவரது மொக்கை ஜோக்குகளுக்கு என ரசிகர் வட்டமும் உருவானது.
இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொக்கை ஜோக்குகள் வெளியிட்டு வருகிறார் அவர்.
View this post on Instagram#mokkajokes #joinTheClub Tag your friends and kill them 😂😂
A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு ஜோக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'என் செல்போன் கீழ போட்டு உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு' என ஜோக்கடித்துள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை சுமார் 2 லட்சத்து 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பலர் இந்த மொக்க ஜோக்கை கேட்டு, 'ப்ளீஸ் போதும் யாஷிகா, முடியல' எனக் கதறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











