ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்

நடிகை யாஷிகா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கைது செய்யப்பட்ட அவரது காதலர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை: ஆடம்பர வாழ்க்கைக்கு யாஷிகா ஆசைப்பட்டதால் திட்டியதாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட துணை நடிகையின் காதலர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விமலின் மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா. சீரியல்களில் நடித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் காதலர் மோகன்பாபு தான் என தனது கடைசி வாட்ஸ் அப் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், யாஷிகாவின் காதலர் மோகன்பாபுவைக் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் மோகன்பாபு.

நட்பு காதலானது:

நட்பு காதலானது:

வடபழனியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த யாஷிகாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகினோம். பின்னர் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

முடிவு:

முடிவு:

இரு வீட்டிலும் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்தோம். அதுவரை தனி வீடு எடுத்து தங்கலாமென முடிவு செய்தோம். அதன்படி, பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தோம்.

ஆடம்பர வாழ்க்கை:

ஆடம்பர வாழ்க்கை:

சினிமாவில் நடிக்கும் ஆசையில் யாஷிகா அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வருவார். மேலும் ஆடம்பரமாக இருப்பாள். போதிய வருமானம் இல்லாததால் செலவை குறைத்துக் கொள்ளும்படி அடிக்கடி கூறுவேன். அவள் எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தாள்.

கோபம்:

கோபம்:

இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் கோபத்தில் என்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன். யாஷிகா தற்கொலை செய்துகொள்வாள் என கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மோகன்பாபுவிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X