நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: பாலாஜிக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து என பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக நயன்தார நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார் யாஷிகா ஆனந்த்.

மகத்துடன் காதல்

மகத்துடன் காதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம்தான் நடிகை யாஷிகா ஆனந்த் பெரும் பிரபலமானார். இதில் மகத்துடன் காதல் என ஆரம்பத்தில் பெயர் டேமேஜ் ஆனாலும் பின்னர் ரொம்பவே முதிர்ச்சியாக நடந்து கொண்டார்.

காரியத்தில் கண்ணு..

காரியத்தில் கண்ணு..

அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இருந்த போதும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகிறார். என்ன விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத யாஷிகா தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்.

பாலாஜியுடன் போட்டோஸ்

பாலாஜியுடன் போட்டோஸ்

அவரது கிளாமர் போட்டோக்களை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது.

நண்பர்களாய் இருந்தோம்

நண்பர்களாய் இருந்தோம்

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் பாலாஜியும் நண்பர்களா என கேட்டு வந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் யாஷிகா ஆனந்த். அதாவது, நாங்கள் நல்ல நண்பர்களாய் இருந்தோம். நான அவருக்காக சந்தோஷப்படுகிறேன்.

Recommended Video

Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss
அந்த டாட்டூ யாருடையது?

அந்த டாட்டூ யாருடையது?

ஏனேன்றால் அவர் இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகளாய் ஆசைப்பட்டார் என்பது எனக்குதான் தெரியும் என பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், பாலாஜியின் கையில் குத்தியிருக்கும் டாட்டூ யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X