'டிஆர்பிக்காக என்ன வேணாலும் செய்வீங்களா'... ஊடகங்களை கெட்டவார்த்தையில் திட்டிய பிக் பாஸ் பிரபலம்..!

சென்னை நுங்கம்பாக்கம் கார் விபத்தில் தனக்கு தொடர்பில்லை என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Yashika Car Accident? : அது என் CAR இல்லை-வீடியோ

சென்னை: தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக நடிகை யாஷிகா ஆனந்த் அறிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் அடிக்கடி பப்களில் ஆட்டம் போட்டப்படி வீடியோ வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட லைவ் வீடியோவில் யாஷிகாவை அவரது ஆண் நண்பர் லிப் கிஸ் அடித்த வீடியோ வைரலானது.

கார் விபத்து

கார் விபத்து

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்க்டன் சாலையில் நடந்த சொகுசு கார் விபத்தில் யாஷிகாவின் பேரும் அடிபட்டது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அவர் தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் உலா வந்தன.

யாஷிகா விளக்கம்

யாஷிகா விளக்கம்

ஆனால் இது உண்மையில்லை என தற்போது யாஷிகா விளக்கமளித்துள்ளார். டிஆர்பிக்காக தனது பெயரை தவறாக பயன்படுத்திய நிருபர்கள் மற்றும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.

வேடிக்கை பார்த்தேன்

வேடிக்கை பார்த்தேன்

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், " அந்த விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விபத்து நடந்ததை பார்த்து பதறி போய், யாருக்காவது அடிப்பட்டு இருக்கிறதா என பார்ப்பதற்காக, ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் நான் காரில் இருந்து இறங்கிச் சென்றேன்.

போலீசுக்கு தெரியும்

போலீசுக்கு தெரியும்

நான் அப்போது எனக்கு ஏற்படப் போகும் ஆபத்தை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. விபத்தை வேடிக்கை பார்த்தவர்கள் நான் தான் விபத்தை ஏற்படுத்தினேன் என கூறியது என் காதில் கேட்டது. அந்த இடத்தில் போலீசாரும் இருந்தனர். ஒருவேளை நான் விபத்து ஏற்படுத்தியிருந்தால் அவர்கள் என்னை சும்மாவிட்டிருப்பார்களா.

சொகுசு கார்

சொகுசு கார்

எனது பெயரில் ஒரு ஹோண்டா சிட்டி கார் மட்டும் தான் உள்ளது. மற்றப்படி வேறு சொகுசு கார் ஏதும் என் பெயரில் இல்லை. இது தான் உண்மை.

டிஆர்பிக்காக

டிஆர்பிக்காக

மீடியாக்கள் அவர்களுடைய சொந்த லாபத்துக்காக என் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
டிஆர்பிக்காக இப்படி செய்திருக்கிறார்கள். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தால் உண்மை என்ன என்பது தெரிந்துவிடும்.

மானநஷ்ட வழக்கு

மானநஷ்ட வழக்கு

டிஆர்பிக்காக என் பெயரை கலங்கப்படுத்திய அந்த... (கெட்டவார்த்தை) நிருபர்கள் மற்றும் மீடியாக்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன். மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X