Yashoda Box Office: 10 நாளில் இத்தனை கோடியா? சமந்தாவின் யசோதா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இதோ!
சென்னை: நடிகை சமந்தா தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்ததும் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய ஆரம்பித்து விட்டனர்.
3 மாதங்களாக அந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு அந்த நோயால் தான் பாதிக்கபட்டு இருப்பதாக அறிவித்தார்.
அதன் பின்னர், வெளியான யசோதா திரைப்படம் 10 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது.

சமந்தாவின் யசோதா
இரட்டை இயக்குநர்களான ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இயக்கத்தில் வாடகைத்தாய் பேரில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவான யசோதா திரைப்படம் கடந்த நவம்பர் 11ம் தேதி வெளியானது. சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வாடகைத்தாயாக
நடிகை சமந்தா இந்த படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார். அவரை போல பல பெண்கள் ஒரு லேப்பில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை அறிந்து கொள்ளும் சமந்தா ஆக்ஷன் நாயகியாக மாறி எதிரிகளை பந்தாடி மற்ற பெண்களை காப்பாற்றுவதே யசோதா படத்தின் கதை.

வசூல் வேட்டை
படம் வெளியான முதல் நாளிலேயே 5 கோடிக்கும் அதிகமான வசூல் குவிந்தது. முதல் வார முடிவில் 4 நாட்களில் சமந்தாவின் யசோதா திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. வார நாட்களில் படத்தின் வசூல் சற்று மந்தமான நிலையில், மீண்டும் வார இறுதி நாட்களில் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

33 கோடி வசூல்
இந்நிலையில், யசோதா திரைப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், ஒட்டுமொத்தமாக இதுவரை 33 கோடி வசூல் செய்துள்ளது. நடிகை சமந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், இப்படியொரு வெற்றியை அவருக்கு ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், தொடர்ந்து ரசிகர்களுக்கு சோஷியல் மீடியாவில் நன்றி தெரிவித்து வருகிறார் நடிகை சமந்தா.

அடுத்தடுத்த படங்கள்
நடிகை சமந்தா நடிப்பில் அடுத்து சகுந்தலம், குஷி உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சமந்தா அந்த படங்களின் பணிகளை முடித்துக் கொடுக்கவும் போராடி வருகிறார். சமந்தாவின் இந்த வெற்றி அவருக்கு மேலும், உற்சாகத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











