சண்டைன்னு யாரு சொன்னது.. ஷூட்டிங் ஸ்பாட்டில் கெத்துக்காட்டிய கீது மோகன்தாஸ்.. பர்த்டே ஸ்பெஷல்!
சென்னை: நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த கீது மோகன்தாஸ் நடிகர் யஷ்ஷை வைத்து டாக்ஸ்கி படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் நயன் தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜூன் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி யுத்தத்தை காரணம் காட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.
ஆனால், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ்ஷுக்கு திருப்தியில்லை என்றும் படத்தின் சில காட்சிகளை மீண்டும் ரீ ஷூட் பண்ணப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இந்நிலையில், செட்டில் பரபரப்பாக கீது மோகன்தாஸ் பணியாற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனைச் சிறப்பிக்கும் விதமாக, அவர் இயக்குநராகப் பணியாற்றி வரும் 'டாக்ஸிக்' படக்குழுவினர், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு ஸ்பெஷல் பிடிஎஸ் (BTS) வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
கீது மோகன்தாஸ் பர்த்டே: படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பாக வெளியாகியுள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' (Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படம் எந்தளவுக்குப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதை இந்த வீடியோ பட்டறை போட்டு காட்டுகிறது. செட்களின் பிரம்மாண்டம், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் கீது மோகன்தாஸின் கூர்மையான படைப்பாற்றல் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஒரு பெண் இயக்குநராக இவ்வளவு பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திரப் பட்டாளம் கொண்ட படத்தை அவர் மிகவும் கவனத்துடனும், துல்லியத்துடனும் கையாளும் விதம் திரையுலகில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
வசனங்களை விட அமைதியான தருணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், பெரிய நட்சத்திரங்களை மிகச்சரியாக ஒருங்கிணைப்பதிலும் கீது மோகன்தாஸ் காட்டும் முதிர்ச்சி, இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. மிக உயர்ந்த சர்வதேசத் தயாரிப்பு மதிப்புகளுடன் இப்படத்தை அவர் செதுக்கி வருகிறார் என்பதை இந்தத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது.
டாக்ஸிக் படத்தின் மெகா கூட்டணி: 'கேஜிஎஃப்' புகழ் யாஷ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படம், இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இவர்களுடன் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டியலே இப்படத்தில் இணைந்துள்ளது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பைத் தந்துள்ளது.
யஷ் தயாரிப்பில் உருவாகிறது: கே.வி.என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. உலகெங்கிலும் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தைக் காண ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நிச்சயமாக, வரவிருக்கும் காலங்களில் இந்தியத் திரையுலகில் 'டாக்ஸிக்' ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. யஷ் ரசிகர்கள் சீக்கிரமே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications