ஜனநாயகனை தூக்கி ஓரம்போட்ட கேவிஎன்.. இனிமே ’டாக்ஸிக்’ திருவிழா தான்.. டீசர் எப்போ தெரியுமா?
பெங்களுர்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஜனநாயகன் படத்தை எப்படியாவது ஜனவரி மற்றும் பிப்ரவரிக்குள் ரிலீஸ் செய்துவிட முடிந்தவரை போராடியது. ஆனால், சூழல் சாதகமாக இல்லாத நிலையில், தேர்தலுக்குப் பிறகு தான் படம் வெளியாகும் என்கிற நிலையில், ஜனநாயகன் படத்தில் இருந்து மொத்தமாக விலகி டாக்ஸிக் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் மார்ச் 19ம் தேதி துரந்தர் 2 படம் வெளியானால் கூட பரவாயில்லை. அதற்கெல்லாம் யஷ் அஞ்சமாட்டார் என்கிற கெத்துடன் அதே தேதியில் முன்பு அறிவித்ததை போலவே டாக்ஸிக் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என கேவிஎன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
டாக்ஸிக் டீசர் ரிலீஸ் அறிவிப்பு: கேஜிஎஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகையே இந்திய சினிமாவுக்கு மட்டுமின்றி உலகளவில் அறிமுகப்படுத்தியவர் யஷ். கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸையும் சாதித்துக் காட்டினார். அந்த படத்துடன் போட்டியாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 20ம் தேதி காலை 9.35 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சர்ச்சையை கிளப்பிய பர்த்டே க்ளிம்ப்ஸ்: டாக்ஸிக் படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸ் காட்சி காண்டம் விளம்பரம் போல உள்ளதாக சர்ச்சைகள் வெடித்தன. மேலும், நடிகர் யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அவரது இண்ட்ரோ க்ளிம்ப்ஸ் அதை விட மோசமாக காருக்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டே பாம் பிளாஸ்ட் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அதற்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், நாளை வெளியாகப்போகும் டீசர் என்ன சம்பவம் பண்ணப் போகிறதோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ரெண்டே பேருக்கு நடுவில் தான் போட்டி: அடுத்த மாதம் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 மற்றும் யஷ்ஷின் டாக்ஸிக் என 2 படங்களும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா அளவில் இந்த 2 படங்களுக்கு நடுவே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே மார்ச் 19ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மற்ற படங்கள் எல்லாம் போஸ்ட்போண்ட் செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications