அச்சு அசலாக ரஜினியின் சாயலில் கெத்தாக ஸ்டைலாக யாத்ரா - ஐஸ்வர்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் முதல் பேரனும், தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகனுமான யாத்ரா அச்சு அசலாக ரஜினியின் சாயலிலேயே வளர்ந்து வருகின்றார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குட்டித் தலைவர் என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா தற்போது சினிமா இயக்கம், உடற்பயிற்சி, யோகா எனத் தனது நேரத்தினை பிசியாக வைத்திருக்கின்றார்.

தாத்தா வீட்டில் யாத்ரா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் பிறந்த யாத்ராவுக்கு தற்போது 15 வயதாகிறது. தனுஷ் ஐஸ்வர்யா திருமண முறிவிற்குப் பிறகு யாத்ராவும், அவரது தம்பி லிங்காவும் போயஸ் கார்டனில் தாத்தா வீட்டில் தாய் ஐஸ்வர்யா பராமரிப்பில் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவ்வப்போது தனது தந்தை தனுஷையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

என்னை விட உயரம்
திருமண முறிவிற்குப் பிறகு ஐஸ்வர்யாவும் சினிமா இயக்கம், பிசினஸ் என பிசியாகி விட்டார் என்றாலும், பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதை அவர் தவறவிடுவதில்லை. யாத்ரா, லிங்காவுடன் சைக்கிளிங் செல்வது, விளையாடுவது என அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றார். நேற்று ஐஸ்வர்யா வெளியிட்ட புதிய புகைப்படத்தில் யாத்ராவின் போஸ் இளம் ரஜினியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "என் மகன் பார்க்கின்ற பார்வையில் தெரிகிறது. என்னதான் நான் உயரத்தை அதிகப்படுத்தும் ஸ்னிக்கர் ஷூ அணிந்திருந்தாலும் அவன் உயரத்தை என்னால் அடைய முடியாது என்று நினைக்கிறான்" எனப் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னும் தனுஷை லைக்கும் ஐஸ்வர்யா
தனுஷும், ஐஸ்வர்யாவும் என்ன தான் விவாகரத்து செய்தாலும், இருவரும் இன்ஸ்டாவில் ஒருவருக்கொருவர் போஸ்ட்களை லைக் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான தனுஷ் நடித்த 'தி கிரேன் மேன்' ஹாலிவுட் திரைப்படத்தின் போஸ்டரை தனுஷ் தனது இன்ஸ்டாவில் பகிர அதனை ஐஸ்வர்யா லைக் செய்திருக்கிறார்.

சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் படம்?
பிரபல கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை ஐஸ்வர்யா படமாக எடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதற்கேற்ற வகையில், நேற்று ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் கூட பிரபல ஈடென் கார்டன் கிரிகெட் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்டது தான். ஐபிஎல்பிளே ஆப் போட்டிகளைப் பார்க்க ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கொல்கத்தா சென்றிருந்தார். எனவே சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை ஐஸ்வர்யா இயக்கப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











