ஸ்டைலில் தாத்தா ரஜினியையே தூக்கி சாப்பிட்ட பேரன்
Recommended Video

சென்னை: ஸ்டைலில் தாத்தா ரஜினிகாந்தை தூக்கி சாப்பிட்டுள்ளார் பேரன் யாத்ரா.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில் தனுஷின் மூத்த மகன் லிங்கா கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மரணம் மாஸ் மரணம் பாடலை யாத்ராவுக்கு பயன்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள். ஒரு நாயகன் உருவாகிறான். ஸ்டைலாக இருக்கிறான் என்றால் அது இயற்கை என்று யாத்ராவை பாராட்டியுள்ளனர்.
தனுஷ் ரசிகர்களோ யாத்ராவின் புகைப்படத்தை அவரின் தந்தையின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
யாத்ரா ஸ்டைலாக இருக்கிறார், தாத்தா, தந்தை வழியில் ஹீரோவாக வருவார் என்று நம்பப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷோ தனது அசுரன் கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்பதால் கேமராக்கள் முன்பு வராமல் இருந்தார்.
புகைப்படங்களிலும் ஒரே ஓரமாக இருந்தார். எந்த புகைப்படத்திலும் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் அப்படி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











