அமிதாப் முதல் சரத்குமார் வரை.. 2020-ல் சினிமா பிரபலங்களை உருட்டி மிரட்டிய கொரோனா வைரஸ்!

By

சென்னை: இந்த வருடம் மக்களை உருட்டி மிரட்டிய கொரோனா, சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

2020 ஆம் வருடத்தின் கொடூரம், கொரோனா. சீனாவின் உகானில் இருந்து பரவிய கொரோனா உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவியது.

இந்தியாவிலும் வேகமாகப் பரவியது. அதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

குணமாகித் திரும்பினர்

குணமாகித் திரும்பினர்

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. லாக்டவுனையும் தாண்டி, இந்த உயிர்கொல்லி தொற்று, ஏராளமானவர்களின் உயிர்களை எளிதாக பலி வாங்கியிருக்கிறது. இன்னும் வாங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் சினிமா பிரபலங்களும் இருக்கிறார்கள். கொரோனா பாதித்த பல நடிகர், நடிகைகள் சிகிச்சைக்குப் பின் குணமாகித் திரும்பி இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆகியோருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். முதலில் ஐஸ்வர்யா ராயும் பிறகு அமிதாப்பச்சனும் குணமாகி வீட்டுக்குச் சென்றுவிட, சில நாட்களுக்கு பிறகு குணமானார், அபிஷேக் பச்சன்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சை

தமிழில் நடிகர் விஷாலும் அவர் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதை உறுதிப்படுத்திய விஷால், கொரோனா பாதித்த அப்பாவுக்கு உதவும்போது தனக்கும் பாதிப்பு ஏற்பட்டது என்றார். பின்னர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியிருந்தார்.

மெல் கிப்சன்

மெல் கிப்சன்

பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மெல் கிப்சனும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வலம் வரும் மெல் கிப்சனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படது. இதை தெரிவித்த அவர், எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு அட்வைஸ் செய்தார்.

இயக்குனர் ராஜமவுலி

இயக்குனர் ராஜமவுலி

இந்த கொரோனாவுக்கு பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியும் தப்பவில்லை. பாதுகாப்பாக இருந்தும் அவரை கொரோனா தாக்கியது. குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் பின்னர் அதில் இருந்து மீண்டார். நடிகையும் எம்.பியுமான சுமலதாவும் பாதிக்கப்பட்டார்.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகர் அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், பிருத்விராஜ், வருண் தாவன், நடிகை நீது கபூர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சை பெற்று குணமடைந்தனர். நடிகை தமன்னாவும் இதனால் பாதிக்கப்பட்டார்.

நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார்

நடிகர் டாக்டர் ராஜசேகர், அவர் மனைவி ஜீவிதா மற்றும் அவர்கள் மகள்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது. இதில் டாக்டர் ராஜசேகர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில்தான் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். இதற்கிடையே நடிகர் சரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X