twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாஷ்பேக் 2015: ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்

    By Siva
    |

    மும்பை: இந்த ஆண்டு பாலிவுட்டுக்கு முத்தான ஆண்டாக அமைந்துள்ளது. 8 படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன.

    2015ம் ஆண்டு சல்மான் கான், ஷாருக்கானுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அதிலும் ஷாருக்கானின் தில்வாலே படத்தை பற்றி கேவலமான விமர்சனங்கள் வெளியாகியும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

    இந்நிலையில் 2015ம் ஆண்டில் ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்களின் விபரங்களை பார்ப்போம்,

    பஜ்ரங்கி பாய்ஜான்

    பஜ்ரங்கி பாய்ஜான்

    சல்மான் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் ரிலீஸான வேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது. உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.316 கோடியை வசூலித்தது.

    தில்வாலே

    தில்வாலே

    ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், கஜோல் ஜோடி சேர்ந்து நடித்த தில்வாலே படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது.

    பாஜிராவ் மஸ்தானி

    பாஜிராவ் மஸ்தானி

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா, ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்த பாஜிராவ் மஸ்தானி படம் ரிலீஸான ஒன்பது நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது.

    பிரேம் ரத்தன் தன் பாயோ

    பிரேம் ரத்தன் தன் பாயோ

    சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சோனம் கபூர் ஜோடியாக நடித்த பிரேம் ரத்தன் தன் பாயோ படம் ரிலீஸான இரண்டே வாரத்தில் ரூ.200 கோடி வசூல் செய்தது. இத்தனைக்கும் படத்தில் சல்மானை தவிர வேறு எதுவும் இல்லை என்றார்கள் விமர்சகர்கள்.

    தனு வெட்ஸ் மனு 2

    தனு வெட்ஸ் மனு 2

    மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு 2 ரிலீஸான அன்று ரூ.8.75 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டு வாரத்தில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது.

    பிக்கு

    பிக்கு

    தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் படமான பிக்கு ரிலீஸான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது. பாசக்கார தந்தை, மகளாக அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனேவும் நடித்திருந்தனர்.

    பாகுபலி

    பாகுபலி

    எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலியின் இந்தி டப்பிங் ரூ.100 கோடி வசூலித்தது. ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலித்தது இதுவே முதல் முறை.

    ஏபிசிடி2

    ஏபிசிடி2

    ரெமே டிசோசா இயக்கிய ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்தனர். படம் மூன்று வாரங்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது.

    English summary
    Eight movies including Bajrangi Bhaijaan, Dilwale, Bajirao Mastani, Piku have crossed Rs. 100 crores in the box office in the year 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X