Year Ender 2022 : அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்...இதில் சமந்தா தான் பாவம்!

சென்னை : 2023ஆம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்பதற்கு முன் இந்த ஆண்டில் நிகழ்ந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை நாம் அலசி வருகிறார்.

டாப் 10 படங்கள், சிறந்த பாடல்கள், சிறந்த நடிகர், நடிகைகள், முக்கியமான நிகழ்வுகள் என பல பதிவுகளை பிலிமிபீட் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு பரீச்சியமான ஓர் அரியவகை நோய்தான் மயோசிடிஸ். இந்த நோயால் சமந்தா பாதிக்கப்பட்டது போல, ஒரு சில நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து இப்போது பார்க்கலாமா?

மயோசிடிஸ் நோய்

மயோசிடிஸ் நோய்

மயோசிடிஸ் நோயா? அப்படி என்றால் என்ன, அந்த நோய் என்னவெல்லாம் செய்யும் என்று தெரியாதவர்கள் நடிகை சமந்தா இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக கூறிய பிறகு இந்த நோய் குறித்து பலரும் இணையத்தில் தேடி தேடி படித்தார்கள். மயோசிடிஸ் என்பது ஒரு தசை அழற்சி நோயாகும். இந்த நோய் எலும்புகளை இணைக்கக்கூடிய தசைகளை தாக்கும். இது கைகள் மற்றும் தோள்கள், கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கும்

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

இந்த அரியவகை நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நோயுடன் தான் போராடுவது பற்றி சமந்தா கண்கலங்க பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களை கலக்கமடைய செய்தது, இருப்பினும் தான் இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறார் சமந்தா. வரும் ஆண்டு நடிகை சமந்தாவுக்கு ஒரு நல்ல ஆண்டாக நிச்சயம் இருக்கும்.

பிரபல நடிகை பூனம்

பிரபல நடிகை பூனம்

பிரபல நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தெரிவித்துள்ளார். இவர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் நடித்த நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியம் ஆனார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், 6, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது பூனம் கவுரும் ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

நடிகை பியா பாஜ்பேய்

நடிகை பியா பாஜ்பேய்

கோ படத்தில் சுருட்டை முடியுடன் க்யூட்டாக வலம் வந்து "அவனா நீ" என்று வசனம் பேசி நம்மனதில் பதிந்தவர் தான் நடிகை பியா பாஜ்பேய். அந்த படத்தைத் தொடர்ந்து ஏகன், கோவா, சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவரும், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

வேதனை அதிகம்

வேதனை அதிகம்

படப்பிடிப்பின் போது காலில் வீக்கம் இருந்ததாகவும், அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். மறுநாளில் இருந்து வீக்கம் அதிகமாகி வலி ஏற்பட்டது. அதன் பின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன் அப்போது தான் அது தசை நார் அழற்சி நோய் என்பதே தெரியவந்தது. ஆனால், அது மயோசிடிஸ் இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், அந்த நேரங்களில் நான் அனுபவித்த வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல என புலம்பி உள்ளார்.

நடிகை யாமி கெளதம்

நடிகை யாமி கெளதம்

விக்கி டோனர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை யாமி கெளதம் கெரடோசிஸ் பிலாரிஸ் என்ற அரிய வகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் தோலில் திட்டுக்கள், தோல் புடைத்து தடிமனாக காணப்படும். மேலும், சில நேரம் வறண்டு விடும். இந்த நோயுடன் நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன்.இது வலியை கொடுக்காது என்பதால், இந்த நோயுடன் வாழ பழகிக்கொண்டேன். இருப்பினும் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X