year ender 2022 : முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை!

சென்னை : நட்சத்திர தம்பதிகளாக கோலிவுட்டில் வலம் வந்த ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் இந்த ஆண்டு திருமண உறவை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்த்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

புயல் வீசியது

புயல் வீசியது

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி திணறிப்போன மக்களுக்கு 2022ம் ஆண்டு கொஞ்சம் ஆறுதலாக பிறந்தது. மக்கள் அனைவரும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தில் புயல் வீசியது.

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். அந்த அறிக்கையில், நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.

எங்கள் முடிவை மதியுங்கள்

எங்கள் முடிவை மதியுங்கள்

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று இருவரும் அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

ரஜினி எப்படி தாங்கிக்கொண்டார்

ரஜினி எப்படி தாங்கிக்கொண்டார்

18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது. குடும்பத்தை பாருங்கள் ... குழந்தைகளை பாருங்கள் என்று எப்போதும் ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் ரஜினி இதை எப்படிதாங்கிக்கொள்ள போகிறார் என அவரது ரசிகர்கள் புலம்பினார்கள்.

விரைவில் சேர்ந்துவிடுவார்கள்

விரைவில் சேர்ந்துவிடுவார்கள்

இருப்பினும் , இந்த பிரிவு நிரந்தரம் இல்லை இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறியிருந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தார்கள். இதையடுத்து, மாறன் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் இருந்த போது, ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் அதே ஓட்டலில் தங்கி இருந்தார். இருவரும் பேசி பிரச்சனையை முடித்துக்கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால், தனுஷ் ஐஸ்வர்யாவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

தோழி என வாழ்த்திய தனுஷ்

தோழி என வாழ்த்திய தனுஷ்

தனுஷை ஐஸ்வர்யா பிரிந்த பிறகு மிகுந்த மனவேதனையில் இருந்ததால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு,இந்தியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. ஐஸ்வர்யா இயக்கிய இந்த ஆல்பத்திற்கு தனுஷ், பாராட்டுக்கள் தோழி என வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

லால் சலாம்

லால் சலாம்

தற்போது ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்க உள்ளார். இதில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

திருமண வாழ்க்கை முறிந்தது

திருமண வாழ்க்கை முறிந்தது

ஐஸ்வர்யா தனது திருமண வாழ்க்யை மறந்து பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல தனுஷூம் வாத்தி,கேப்டன் மில்லர், இயக்குநர் சேகர் கமுல்லா படத்தில் கமிட்டாகி உள்ளார். இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருக்க இவர்களின் இரண்டு மகன்களும் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர். இவர்களின் 18ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்ததை நினைத்து இவர்களின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X