கோலிவுட் ஹீரோக்களின் தூக்கத்தை கலைத்த மற்ற மொழி நாயகர்கள்... வசூல் முதல் சர்ச்சை வரை

சென்னை: 2022ம் ஆண்டில் ஏராளமான தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் மற்ற மொழி திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸாகி கெத்து காட்டின.
இதில் சில திரைப்படங்கள் கோலிவுட் ஹீரோக்களுக்கே கலக்கத்தை ஏற்படுத்தும அள்வுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
அப்படி கோலிவுட் மாஸ் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த மற்ற மொழி ஹீரோக்களையும் அவர்கள் நடித்த படங்களையும் இப்போது பார்க்கலாம்.

 முதலிடத்தில் கேஜிஎஃப்

முதலிடத்தில் கேஜிஎஃப்

இந்த வரிசையில் முதல் இடத்தில் உள்ள திரைப்படம் கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் தான். யாஷ் நடிப்பில் பான் இந்நியா படமாக உருவான கேஜிஎஃப், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஜய்யின் பீஸ்ட்டுக்கு எதிராக களமிறங்கியது. பீஸ்ட் ரிலீஸான அடுத்த நாளில் கேஜிஎஃப் திரைப்படமும் ரிலீஸானது. இதனால் பீஸ்ட் படத்திற்கு முதல் நாளில் மட்டுமே நல்ல ஓப்பனிங் கிடைத்தது. முக்கியமாக பீஸ்ட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைத்ததால், முதல் வாரம் முடிந்ததும், கேஜிஎஃப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கியதாக சர்ச்சையானது. அதேபோல் தமிழக பாக்ஸ் ஆபிஸிலும் கேஜிஎஃப் தான் பீஸ்ட்டை காலி செய்தது குறிப்பிடத்தக்கது.

 காந்தாரா நம்பர் 2

காந்தாரா நம்பர் 2

கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படம், வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தியா முழுவதும் இந்தப் படம் மிகப் பெரிய பேசுபொருளானது. முக்கியமாக பொன்னியின் செல்வன் ரிலீஸான அதே செப்டம்பர் 30ம் தேதி தான் காந்தாராவும் வெளியானது. இந்தப் படம் த்மிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும், மற்ற மாநிலங்களில் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக இருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களுமே 400 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தாலும், பட்ஜெட்டை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் காந்தாரா தான் மாஸ் காட்டியுள்ளது.

 ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்

இந்தப் பட்டியலில் ராஜமெளலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. கோல்டன் குளோப், ஆஸ்கர் என பல சர்வதேச விருதுகளுக்கான் போட்டியில் பங்கேற்றுள்ள ஆர்.ஆர்.ஆர், 2022ல் இந்தியாவின் பிரபலமான திரைப்படம் என ஏற்கனவே தேர்வாகி இருந்தது. பாகுபலியைப் போல மிகப் பிரம்மாண்டமாக உருவான ஆர்.ஆர்.ஆர், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் ஆக்சன், ராஜமெளலியின் மேக்கிங் என கெத்து காட்டியது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய ஓப்பனிங் இல்லையென்றாலும், ஆர்.ஆர்.ஆர் ரிலீஸின் போது தமிழில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 சீதா ராமம், ராக்கெட்ரி

சீதா ராமம், ராக்கெட்ரி

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்த சீதா ராமம் இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான சீதா ராமம், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடியை கடந்தது. ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸான இந்தப் படம் எதிர்பார்ப்பே இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், மாதவனின் ராக்கெட்ரி படம் 5வது இடத்தில் உள்ளது. நம்பி நாராயணனின் பயோபிக் படமாக வெளியான ராக்கெட்ரி மேக்கிங்கில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், பல உண்மையான தகவல்கள் இல்லாமல் மாதவனின் கற்பனையில் உருவான பேண்டசி திரைப்படம் என பலரும் விமர்சித்திருந்தனர்.

 அகண்டா, தி காஷ்மீர் ஃபைல்ஸ்

அகண்டா, தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இதில், பாலகிருஷ்ணா நடித்த அகன்டா திரைப்படம் 6வது இடத்தில் உள்ளது. முழுக்க ஆக்சன் ஜானரில் உருவான இந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. பாலகிருஷ்ணாவின் ஆக்சன் காட்சிகள் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டிருந்தாலும், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மிக முக்கியமாக ஓடிடியில் வெளியான பின்னர், அகண்டா படத்தின் ரீச் இன்னும் செம்மையாக இருந்தது. அதேபோல் பாலிவுட்டில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமும் தமிழ்நாட்டில் ஓரளவு வரவேற்பை பெற்றது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் காஷ்மீரில் உள்ள இந்து பண்டிட்களுக்கு நடந்த கொடுமையை பேசுவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சினிமா ஆர்வலர்களும் இந்தப் படம் உண்மைக்குப் புறம்பான வரலாற்றைப் பேசுவதாக விமர்சனம் செய்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X