Year Ender 2023: ஒரே வீடியோ சிவகார்த்திகேயன் மார்க்கெட் காலி.. நொந்து போன எஸ்.கே!

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேராதரவு கொண்ட நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சிவகார்த்திகேயனின் ஆரம்பகால வளர்ச்சியில் டி.இமானின் பங்கு ரொம்ப முக்கியமானதாக இருந்தது.

Year Ender 2023: actor sivakarthikeyan and music composer d imman issue

டி இமான் இசையமைத்த கொடுத்த பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்து சிவாவை பலரிடம் கொண்டுபோய் சேர்த்தது. அதன் காரணமாக இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

சின்னத்திரையில் டி இமான்: இசையமைப்பாளர் டி இமான் சீரியல்களில் கிருஷ்ணதாசி என்ற சீரியலுக்கு தான் முதலில் பின்னணி இசை அமைத்தார். அதன்பிறகு கோலங்கள், போலீஸ் டைரி, மந்திர வாசல் உள்ளிட்ட சீரியல்களுக்கு இசையமைத்து பின் நாளில் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

விவாகரத்து: இப்படி சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து பெரிய இடத்தை பிடித்த டி இமான் இரு ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி மெளனிகாவை விவாகரத்து செய்துவிட்டு அமலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் ட்விட்டரில், அமலியின் மகள் இனி என் மூன்றாவது மகள். என் திருமணத்தில் என் மகள்கள் பங்கேற்காதது வருத்தமே என பதிவிட்டு இருந்தார்.

அண்ணன் தம்பி போல: தன்னைப் போலவே சிவகார்த்திகேயனும் அடிமட்டத்தில் இருந்து வந்ததால், இருவரும் அண்ணன் தம்பிபோலவே பழகி வந்தனர். ஆனால், , நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடித்த எந்த படத்திற்கும் இமான் இசையமைக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

துரோகம் செய்தார்: இதையடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த டி,இமான், நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை வெளியே சொல்ல முடியாது. இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் பேசினேன். அவர் கூறிய பதில்களை பொதுவெளியில் கூற விரும்பவில்லை. இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

சர்ச்சையில் சிக்கினார்: இமான் பபட்டும் படாமல் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியது, சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது. இதனையடுத்து டி.இமான் தனது மனைவியை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணமா என்றும், சிவகார்த்திகேயன் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார். அது என்ன துரோகம் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

மேலும் டேமேஜ்: இணையத்தில் இந்த விவகாரம் பற்றி எரிந்த நிலையில் சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்ற கருத்துக்களும் பரவ தொடங்கியது. ஆனால் தன்னுடைய இணைய கூலிப்படை மூலம் அவர் தான் இது போன்ற விஷயங்களை பரப்பி வருவதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறி சிவகார்த்திகேயனின் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கியார்.

இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேராதரவு கொண்ட நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குரியாக உள்ளது. இனிவரும் 2024ம் ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடவுளிடம் வேண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X