Year Ender 2023: உன் ரேட் என்ன..ரூமுக்கு வா.. தொகுப்பாளினியிடம் அசிங்கமாக பேசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சோஷியல் மீடியாவில் எப்போதும் விவகாரமான விஷயத்தை பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் தொகுப்பாளினியை ரூமுக்கு வா என்று அழைத்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன். ஆயுசு நூறு, தர்மதுரை, தெனாலி, பம்பல் கே சம்மந்தம் என பலத்திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகராக மட்டுமல்லாமல், சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார். அந்த சினிமா அனுபவத்தைக் கொண்டு நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து பேசி வருகிறார்.

Year Ender 2023: Bayilvan ranganathan controversy talk about anchor netizens slams

அது மட்டுமில்லாமல் சொந்தமாக யூட்யூப் சேனல் நடத்தி வரும் இவர், நடிகைகள் குறித்தும் அவர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசி வருவதால், கடுப்பான ரேகா நாயர், அவர் வாக்கிங் செல்லும் பீச்சுக்கே சென்று அடிக்க பாய்ந்தார். அதுமட்டுமில்லாமல், பயில்வான் ரங்கநாதன் செத்தா தீபாவளி கொண்டாடுவேன் என்றார்.

இப்படி யார் கழுவி ஊற்றினாலும் அடங்காத பயில்வான் ரங்கநாதன், தொகுப்பாளினி ஒருவரிடம் மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? அவர்களின் வாழ்க்கை எப்படி போனா உங்களுக்கு என்ன, உங்களுக்கு காசு வந்தா போதுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார் தொகுப்பாளினி

சரியான சாக்கடை: இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், என்னை பற்றி என் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும், நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், பாக்யராஜ் போன்ற நல்ல மனிதர்கள் தான் என்னை சினிமாவில் வளர்த்துவிட்டார்கள். இதனால், சினிமாவில் உள்ள சாக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறேன் என்றார். உடனே அந்த தொகுப்பாளினி அந்த சாக்கடையில் தான் நீங்களும் இருக்கீங்க என்றார்.

நொந்த பயில்வான்: இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டென்ஷனான பயில்வான் ரங்கநாதன் என் வெயிட்டுக்கும், என் உடம்புக்கும் எட்டி மிதிச்சேன் சட்னி ஆய்டுவ என்று சொல்ல, யாரு நீங்க என்ன மிதிப்பீங்களா? முன்புதான் நீங்க தொகுப்பாளினி இப்போது நீங்க நொந்த பயில்வான் என்று நக்கல் அடித்தார். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் ரங்கநாதன், எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், உன் ரேட் என்னன்னு சொல்லு, ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று படுமோசமாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் கடுமையாக திட்டினர். வழக்கமாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடும் பயில்வான் இந்த ஆண்டு தொகுப்பாளினியிடம் அசிங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X