Year Ender 2024: மன்சூர் அலிகான் முதல் விஜய் வரை.. 2024ல் த்ரிஷா சந்தித்த சர்ச்சைகள் ஒரு ரவுண்டப்!

சென்னை: தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நீடிப்பதை விடவும், கதாநாயகியாக நீடிப்பதில்தான் அதிக சவால்கள் உள்ளது. அந்த அளவுக்கு போட்டி நிறைந்த சினிமா உலகில், கடந்த 22 ஆண்டுகளாக கதாநாயகியாக ஜொலித்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் கடந்த வாரத்தில்தான் தனது சினிமா வாழ்க்கை தொடங்கி 22 ஆண்டுகள் ஆனது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தார். நடிகை த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாகவும் அதேநேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஆண்டாகவும் Year Ender 2024 அமைந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில், கதாநாயகிகளின் தோழியாக, எதாவது ஒரு ஃப்ரேமில் நடித்துக் கொண்டு இருந்தவர், தான் கதாநாயகியாக அறிமுகமான பின்னர், 22 ஆண்டுகள் இதுவரை கதாநாயகியாக நடித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் கமிட் ஆகின்றார் என்றால், அவரது உழைப்பை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகள் ஒரு நடிகை வெற்றிக் கொடி நாட்டிவிட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படும் காலத்தில், 22 ஆண்டிகள் என்றால் சும்மாவா?. சினிமா கிராஃப் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே போனாலும், த்ரிஷாவைச் சுற்றி கிசுகிசுக்கள் நாளுக்கு நாள் அதிமகாகிக் கொண்டே உள்ளது. அது குறித்தும் பார்க்கலாம்.

year ender 2024 trisha vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. இந்தப் படத்தில் நடித்த மன்சூர் அலிகான், செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், காஷ்மீரில் படப்பிடிப்பு, த்ரிஷாதான் நடிகை, எப்படியும் த்ரிஷாவைத் தூக்கிக் கொண்டுபோய் ரேப் செய்வதைப் போல எதாவது காட்சி இருக்கும் என நினைத்தேன்' என, மிகவும் மோசமாக பேசினார். இவரது பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதற்கு த்ரிஷாவும், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மிகவும் காட்டமாக தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல், த்ரிஷா மிகவும் கோபத்தோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தார், குறிப்பாக நல்லவேளை லியோ படத்தில் ஒரு காட்சி கூட அவருடன் நான் நடிக்கவில்லை. எதிர்காலத்திலும் அவருடன் நடிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தார்.

அதிமுக: மற்றொரு சர்ச்சை என்றால், அதிமுக நிர்வாகி ஒருவர், த்ரிஷா குறித்து மிகவும் மோசமாக கருத்து தெரிவித்ததுதான். அவரது பேச்சு மிகவும் தரக்குறைவாக இருந்தது மட்டும் இல்லாமல் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் சங்கத்தின் தரப்பில் இருந்து உண்மைக்கு மாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விளம்பரத்திற்காக சிலர் கூறிக் கொள்கின்றனர் என கண்டன அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

year ender 2024 trisha vijay

விஜய்: இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யுடன் சேர்த்து வைத்து கடந்த வாரம்கூட ஒரு கிசுகிசு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுதியது. ஏற்கனவே, விஜய்யின் 50வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க த்ரிஷா பகிர்ந்த புகைப்படம், கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய்யுடன் கோவாவுக்கு தனி விமானத்தில் சென்றது குறித்த வீடியோ ஆகியவை, த்ரிஷா விஜய் குறித்த கிசுகிசுக்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிட்டது. இது தொடர்பாகவும் பலவிதமான சர்ச்சைக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றது. முதல் இரண்டு விஷயங்களுக்கும் அதிருப்தியை வெளிப்படுத்திய த்ரிஷா இந்த விவகாரத்தில் அமைதியாகவே இருக்கின்றார். அதேநேரத்தில் விஜய், இந்த விஷயங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

year ender 2024 trisha vijay

சினிமா: இப்படி த்ரிஷாவைச் சுற்றி இந்த ஆண்டு சர்ச்சைகள் நிரம்பி இருந்தாலும், த்ரிஷா அவற்றால் முடங்கிப்போகவில்லை. அவரது சினிமா கிராஃப் தொடர்ந்து உச்சத்தில்தான் இருந்து கொண்டு உள்ளது. அதாவது, விஜய்யின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தது, கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் சூர்யாவின் 45வது படத்திலும் கமிட் ஆனது என தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகின்றார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ஒரு படம் என த்ரிஷாவின் கிராஃப் உயர்ந்துகொண்டேதான் இருந்தது. கில்லி ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் த்ரிஷாவுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. த்ரிஷாவுக்கு அடுத்த ஆண்டு இதைவிடச் சிறப்பாக, பல வெற்றிகளைக் கொடுக்கும் ஆண்டாக அமைய ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.

year ender 2024 trisha vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X