Year Ender 2024.. ஓவர் பில்ட் அப்.. மரண அடி வாங்கிய கங்குவா.. சூர்யாவுக்கு சரியில்லை.. ஒரு ரீவைண்ட்
சென்னை: 2024ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த வருடத்தில் ஏகப்பட்ட தமிழ் படங்கள் ரிலீஸாகி ஹிட்டும் ஆகியிருக்கின்றன; தோல்வியும் அடைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான படம் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட ஹைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் கொடுத்த ஹைப்புக்கு ஒர்த் இல்லாமல் படம் படுதோல்வியை சந்தித்து கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.
சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம்,விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களை தொடர்ந்து இயக்கி விவேகம் படத்தை மட்டும் தோல்வி படமாக கொடுத்தார். அஜித்துக்கு மூன்று படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுத்ததன் காரணமாக ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில்தா சூர்யாவுடன் சிவா இணையப்போவதாக அறிவிப்பு வெளியானது.

கங்குவா: படத்துக்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டது. ஞானவேல் ராஜா 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரித்தார். இதில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, போஸ் வெங்கட், கருணாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என ஒரு நட்ச்த்திர பட்டாளமே நடித்தது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முதன்முறையாக சூர்யாவுடன் சிவா இணைவதால் ஒருபக்கம் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்தாலும்; அண்ணாத்த கொடுத்த தோல்வி மறுபக்கம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
ஓவர் ஹைப்: இருந்தாலும் படத்தில் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர் எல்லாம் ரசிகர்களிடையே நிம்மதியை கொடுத்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்தபோதுதான் படத்துக்கு வினையும் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஒரு பேட்டியில், 'கங்குவா படத்தின் முதல் பாகத்தோடு எந்தப் படமும் போட்டிக்கு வரலாம். ஆனால் முதல் பாகத்தை பார்த்துவிட்டு அதன் இரண்டாம் பாகத்துக்கு போட்டியாக யாரும் படத்தை இறக்கமாட்டார்கள்' என்று கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்களோ என்ன பேச்சு கொஞ்சம் ஓவரா இருக்கே என்று புலம்ப ஆரம்பித்தனர்.
2,000 கோடி ரூபாய் வசூல்: சரி அதோடு நிறுத்திக்கொள்வார் என்று பார்த்தால் அதற்கு பிறகுதான் ஆரம்பித்தது மெயின் கச்சேரி. தான் அளித்த இன்னொரு பேட்டியில், 'கங்குவா படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாய் வசூல் செய்யும்' என்று ஒரே போடாக போட்டார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா ரூட் வேற மாதிரி போகுதே என்று பேச ஆரம்பித்தார்கள். மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 'இந்த பாஸை பத்திரமாக வைத்திருங்கள். டிசம்பர் மாதம் படத்தின் சக்சஸ் மீட் நடக்கும்; அதற்கு இந்த பாஸை கொண்டு வாருங்கள்' என்று பேசினார்.
சூர்யாவின் பங்கு: சரி படத்துக்கு பணம் போட்ட தயாரிப்பாளர் ஹைப் ஏற்றுகிறார் என்று பார்த்தால் சூர்யாவும் தனது பங்குக்கு ஹைப் ஏற்றினார். தான் ஏறும் மேடைகளில் எல்லாம், ' கங்குவா நெருப்பு மாதிரி இருக்கும்' என்று கூறினார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தை பார்க்கும்போது 'இப்படியும் ஒரு படம் எடுக்க முடியுமா என்று பலரும் வாயை பிளந்து பார்ப்பார்கள்' எனவும் பேசினார். சூர்யாவின் பேச்சை பார்த்த ரசிகர்களோ, அய்யய்யோ என்ன அஞ்சான் வாடை அடிக்குது; பேச்சை கம்மி பண்ணலாமே என்று ஓபனாக சொல்ல ஆரம்பித்தனர்.
படுதோல்வி டூ ட்ரோல்: போதாக்குறைக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கியோ,கங்குவாவை வைத்து பத்து பாகங்கள் எடுக்கலாம் என்று கொளுத்திப்போட்டார். இப்படி ஏகப்பட்ட ஹைப்புகளுடன் படம் நவம்பர் மாதம் வெளியானது. இவ்வளவு பேசி வைத்திருக்கிறார்களே படத்தில் ஏதாவது வைத்திருப்பார்களா என்ற சந்தேகத்துடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி காத்திருந்தது. படத்தை பார்த்த அவர்களோ, ஏங்க பாஸ் நீங்க பேசிய அளவில் ஒரு சதவீதம்கூட படத்தில் எதுவுமே இல்லையே.இப்படி ஒரு படத்தை செய்துவிட்டு எப்படி அப்படி உங்களுக்கு மனம் வந்தது என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்தார்கள்.
இன்னொரு அஞ்சான்: முக்கியமாக படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலயே வந்த , 'யோ யோ புடிச்சது நான்தான்.. ஹே ஹே முடிச்சது நான்தான்' டயலாக்கிலிருந்து தொடங்கி படம் முழுவதும் வந்த வசனங்கள், காட்சிகள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் வைத்து செய்துவிட்டார்கள் ரசிகர்கள். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சானைவிடவும் இந்தப் படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றினார்கள். படம் படுத்துவிட்டது. இனியாவது சூர்யாவும் அவர் தரப்பும் பட ரிலீஸ் சமயத்தில் இப்படி ஹைப்பை ஏற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸோடு முடித்துக்கொண்டார்கள். ஆக இந்த வருடம் சூர்யாவுக்கு பேரிடி இறங்கிய வருடம் என்றே பலராலும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அடுத்த வருடமாவது சூர்யாவுக்கு மருந்திடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











