Year Ender 2024: உலக சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய பெண்கள்.. சூப்பரான ஆண்டு!

சென்னை: 2024ஆம் ஆண்டு பெண்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது என்று சொல்லலாம், பெண்களால் இயக்கப்பட்ட மற்றும் சக்திவாய்ந்த பெண் கதாநாயகிகள் பேசப்பட்டனர். கேன்ஸ் முதல் சன்டான்ஸ் வரை உலகளாவிய இந்த ஆண்டு பெண்கள் கொண்டாடப்பட்டனர்.

பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற நாடகம் அந்த ஆண்டின் சிறப்பான படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படம் மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மற்ற படங்களுடன் சேர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற முதல் இந்தியத் திரைப்படமாக இப்படம் மாறி உள்ளது. இப்படத்தில் கனி குஸ்ருதி , திவ்ய பிரபா , ​​சாயா கதம் மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், 82வது கோல்டன் குளோப் விருது விழாவில் , சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

year ender 2024

லாபதா லேடீஸ்: கிரண் ராவ் இயக்கத்தில் சர்வதேச அளவில் வெளியானத் திரைப்படம் லாபதா லேடீஸ். அமீர் கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே இணைந்து தயாரித்த இப்படத்தில், நிதன்ஷி கோயல் , பிரதிபா ரந்தா , ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா , சாயா கடம் , ரவி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர், இரண்டு புதுமணத் தம்பதிகள் தங்கள் கணவரின் வீட்டிற்கு ரயிலில் பயணம் செய்யும்போது பரிமாறிக்கொள்ளும் விஷயத்தை நகைச்சுவையுடன் இயக்குநர் கூறியுள்ளார். மார்ச் மாதம் தியேட்டரில் வெளியான இப்படத்தின் கதை மற்றும் வலுவான நடிப்பிற்காக படத்தை பலர் பாராட்டினர். மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் 'லாபதா லேடீஸ்' சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதை வென்றது.

Girls Will Be Girls: சுசி தலாதி எழுதி இயக்கிய 'Girls Will Be Girls' இத்திரைப்படம் ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியானது. ப்ரீத்தி பாணிக்ராஹி, கனி குஸ்ருதி மற்றும் கேசவ் பினோய் கிரோன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகி மீராவின் பயணத்தை பற்றிய கதையாகும். இப்படம் 2024 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் இடம் பெற்று முத்திரையை பதித்தது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரு விருதுகளை பெற்றது.

சந்தோஷ்: சந்தியா சூரி இயக்கிய ஹிந்தி மொழி படம் தான் 'சந்தோஷ்'. இதில், கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு தனது கணவர் பார்த்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. அதில் இருக்கும் சங்கடத்தை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. இதில், விதவைப் பெண்ணாக ஷஹானா கோஸ்வாமி நடித்தார், இப்படம், 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவில் படம் திரையிடப்பட்டு, நேர்மறையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் ஜனவரியில் இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

More from Filmibeat

Read more about: year ender 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X