மண்ணைக் கவ்விய மகேஷ் பாபு.. பிரபாஸ், அல்லு அர்ஜுன் பக்கா மாஸ்.. இது டோலிவுட் டாப் 10 பாக்ஸ் ஆபீஸ்!

ஹைதராபாத்: தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா படங்கள் இந்த ஆண்டு பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. அதே போல மலையாளத்தில் மோகன்லால் மோசம் செய்துவிட்டார். பாலிவுட் ஹீரோக்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. கன்னடத்திலும் பெரிதாக ஹிட் இல்லை. டோலிவுட் மட்டுமே இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் சும்மா ரவுண்டு கட்டி ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டியுள்ளது.

டோலிவுட் படங்களின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும், ஒரு சீன் நல்லா இல்லை என்றாலும் அடுத்து ஒரு வெயிட்டான சீனை வைத்து புஷ்பா 2 படத்தை போல பல படங்கள் தியேட்டர் பக்கம் ரசிகர்களை வரவழைத்து கல்லா கட்டின.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். எந்த எந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

10. நா சாமி ரங்கா: விஜய் பின்னி இயக்கத்தில் நாகார்ஜுனா, அல்லரி நரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 14ம் தேதி வெளியான நா சாமி ரங்கா திரைப்படம் 45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 37 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவினாலும் இந்த ஆண்டு டாப் 10 இடத்தில் அதிக வசூலை ஈட்டிய 10வது படமாக அந்த படம் இடம்பிடித்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் படமெல்லாம் 27 கோடி தான் வசூல் என்கின்றனர்.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

9. கா பட வசூல்: சுஜீத், சந்தீப் இயக்கத்தில் கிரண் அப்பாவராம், நயன் சாரிகா, தான்வி ராம் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான கா திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி 9வது இடத்தை பிடித்துள்ளது.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

8. சரிபோதா சனிவாரம்: விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியான சரிபோதா சனிவாரம் திரைப்படம் 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100.39 கோடி வசூலை உலகளவில் ஈட்டி 8வது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான தரமான படங்களில் இந்த படத்துக்கும் டாப் இடம் உண்டு.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

7. லக்கி பாஸ்கர்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நல்லா இருக்கு என ரசிகர்கள் சொன்னாலும் டோலிவுட் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. 115 கோடி வசூலை அந்த படம் அள்ளி டாப் 10 பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

6. டில்லு ஸ்கொயர்: மாலிக் ராம் இயக்கத்தில் சித்து, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படம் 135 கோடி வசூல் செய்து தூள் கிளப்பியது. சித்து மற்றும் அனுபா பரமேஸ்வரின் ஹாட் கிஸ் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

5. குண்டூர் காரம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ஜனவரி 12ம் தேதி சங்கராந்தி ஸ்பெஷலாக ஹெவி மசாலாவுடன் வெளியானது. ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதிக பட்சமாக வெறும் 200 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியதாக கூறுகின்றனர். படத்தில் மகேஷ் பாபுவின் சம்பளத்துடன் சேர்ந்த பட்ஜெட்டே 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

4. ஹனுமான்: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் அதே ஜனவரி 12ம் தேதி வெறும் 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி 350 கோடி வசூலை ஹனுமான் திரைப்படம் அள்ளி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெத்த லாபத்தையும் அள்ளித் தந்தது. இப்போ புஷ்பா 2 இந்தியில் ஓடுவது போல இந்த ஆண்டு ஜனவரி மாதமும் ராம பக்தர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை பெருமளவில் ஓடவைத்தனர்.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

3. தேவரா: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் நடிப்பில் செப்டம்பர் 27ம் தேதி வெளியான தேவரா திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் ஜூனியர் என்டிஆரின் ஸ்டார்டம் காரணமாக 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 403.83 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

2. கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜமெளலி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், பசுபதி, சோபனா என நட்சத்திர பட்டாளமே நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்த ஆண்டின் முதல் 1000 கோடி கிளப் படமாக மாறியது. 1100 கோடி ரூபா வரை உலகளவில் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

புஷ்பான்னா பிராண்டு: இந்த ஆண்டு டோலிவுட் மட்டுமின்றி ஆல் இந்தியா அளவிலும் நம்பர் ஒன் படமாக புஷ்பா 2 முதலிடத்தை பிடித்துள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் 1705 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

year ender 2024 pushpa 2 kalki 2898 ad 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X