இந்த ஆண்டு தியேட்டர்களை தெறிக்கவிட்ட வில்லன் நடிகன் யார்?.. டாப் 5 பெஸ்ட் வில்லன் லிஸ்ட் இதோ!

சென்னை: கடந்த ஆண்டு அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை தனது மிரட்டலான நடிப்பால் கவர்ந்தார். ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட வில்லன் நடிகர்கள் ஹீரோக்களுக்கு நிகராகவும் ஹீரோவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அசால்ட்டு காட்டி வருகின்றனர்.

சில சமயங்களில் ஹீரோக்கள் வில்லன்களாக மாறும் இடங்களில் அவர்கள் செய்யும் பர்ஃபார்மன்ஸ் எல்லாம் ஆல் டைம் அல்டிமேட்டாக இருக்கும். அந்த வரிசையில், இந்த ஆண்டு ஏகப்பட்ட டாப் ஹீரோக்கள் வில்லனாகவும் களமிறங்கி ரசிகர்களை என்டர்டெயின் செய்து மிரள வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு இந்தியளவில் வெளியான படங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 5 வில்லன் நடிகர்கள் குறித்த பட்டியலை இங்கே பார்ப்போம் வாங்க..

5. எஸ்.ஜே. சூர்யா: விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சரிபோதா சனிவாரம் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து மாஸ் காட்டியது நம்ம எஸ்.ஜே. சூர்யா தான். தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திலும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 என பல படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இந்தியளவில் வில்லனாக இந்த ஆண்டு அதிக கவனத்தை இவர் பெற்றுள்ளார்.

year ender 2024 kamal haasan vijay 2024

4. அனுராக் காஷ்யப்/சிங்கம்புலி: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி நட்ராஜ், சிங்கம்புலி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்தியா முழுவதும் 100 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது சீனாவில் வெளியாகி பாகுபலி படத்தின் வசூல் சாதனையையே முறியடித்துள்ளது. அங்கேயும் 100 கோடி வசூல் செய்த நிலையில், 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனமும் சிங்கம்புலியின் நெகட்டிவ் ரோலும் ரசிகர்களை அதிரவைத்தது குறிப்பிடத்தக்கது.

year ender 2024 kamal haasan vijay 2024
year ender 2024 kamal haasan vijay 2024

3. மம்முட்டி: டாப் 3 இடத்தை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி பிடித்துள்ளார். பிரமயுகம் படத்தில் சாத்தானாக அவர் நடித்த நடிப்பு தியேட்டரில் படத்தை பார்த்தவர்களை பீதியடையச் செய்தது. ராகுல் சதாசிவன் இயக்கத்தில் தரமான திகில் படமாக வெளியான பிரமயுகம் படம் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தும்பட் படத்தை போல இந்த படமும் பக்காவான ஹாரர் படம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

year ender 2024 kamal haasan vijay 2024

2. விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆனாலும், தளபதி vs இளைய தளபதி தான் தியேட்டரில் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. க்ளோனிங் விஜய்யாக யங் லுக்கில் வந்து காந்தி விஜய்க்கு நெருக்கமானவர்களை போட்டுத் தள்ளும் காட்சிகளில் எல்லாம் விஜய்யின் வில்லத்தனம் வெறித்தனம்.

year ender 2024 kamal haasan vijay 2024

1. கமல்ஹாசன்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிப்பில் இந்த ஆண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாகி 1100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பான் இந்தியா வெற்றியை பெற்ற கல்கி 2898 ஏடி படத்தில் சுப்ரீம் யஷ்கின் கதாபாத்திரத்தில் கொஞ்ச சீன்களே வந்தாலும் கதிகலங்க வைத்திருப்பார். தனது கண்ணீரை எடுத்து அந்த விஞ்ஞானியை கொல்லும் காட்சிகள் எல்லாம் மாஸ்டர்பீஸ்.

year ender 2024 kamal haasan vijay 2024

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X