Year Ender 2025 - இந்த ஆண்டு நம்பிக்கை தந்த அறிமுக இயக்குநர்கள்.. இவங்களுக்கு செம எதிர்காலம் இருக்கு!

சென்னை: 2025ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகிறது. இவ்வருடத்தில் எக்கச்சக்கமான படங்கள் தமிழில் ரிலீஸாகின. அவற்றில் சரி பாதி படங்கள் சரியாக போகவில்லை என்று திரைத்துறை ஆர்வலர்களால் சொல்லப்படுகிறது. அதேசமயம் அறிமுகமான இயக்குநர்கள் சிலர் தங்களது முதல் படத்தை தரமாக கொடுத்து; தங்கள் வருகையை சத்தமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கோலிவுட்டில் வளமான எதிர்காலம் இருக்கிறது.

தமிழில் இந்த வருடம் பெரிய இயக்குநர்களின் படங்கள், அறிமுக இயக்குநர்களின் படங்கள் வந்தன. பெரிய இயக்குநர்களாக கருதப்படும் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்கிய படங்கள் எல்லாம் படுதோல்வியையோ அல்லது சுமாரான வரவேற்பையோதான் பெற்றன. அதேசமயம் அறிமுகமான இயக்குநர்களில் சிலர் நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

Year Ender 2025 Tamil Cinema Debut Directors Shine While Big Films Struggle
Photo Credit:

சிறை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி: இந்த வருடத்தின் கடைசியில் தமிழில் வெளியான தரமான படம் என்ற பெயரை பெற்றிருக்கிறது சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதிய கதையை விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்டோரை வைத்து சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார். ஒவ்வொரு காவல் துறை அதிகாரியிடமும் குறைந்தபட்ச அதிகாரம் இருக்கும். அதனை எளிய மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற ஒன்லைனை கொண்டு அற்புதமாக படைத்திருந்தார் இயக்குநர். முக்கியமாக இஸ்லாமிய பெயர் வைத்திருந்தாலே அவரை சந்தேக கண்ணில் பார்க்கும் அவல நிலையை மூன்று நிமிட காட்சியாக எடுத்து சம்மட்டி கொடுத்த இயக்குநர் சுரேஷ் நிச்சயம் வருங்காலங்களில் பெரிய சம்பவங்களை செய்வார் என்று நம்பலாம்.

மெட்ராஸ் மேட்னி கார்த்திகேயன் மணி: காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மெட்ராஸ் மேட்னி. கார்த்திகேயன் மணி இந்தப் படத்தை இயக்கி அறிமுகம் ஆனார். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை சமீபமாக எந்தப் படமும் இவ்வளவு நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் காண்பிக்கவில்லை. அந்தவகையில் மெட்ராஸ் மேட்னி அனைவரையும் கவர்ந்த படமாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களில் வரும் எமோஷனல் சீன்கள் எல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆனாலே சலிப்பு தட்டிவிடும். அந்த சலிப்பை எங்கேயும் ரசிகர்களுக்கு கொடுக்காமல்; ஒவ்வொரு ரசிகரும் தன்னுடைய வாழ்க்கையையோ, தான் நேரடியாக பார்த்த வாழ்க்கையையோ திரையில் பார்க்கும் அனுபவத்தை கடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.

Year Ender 2025 Tamil Cinema Debut Directors Shine While Big Films Struggle
Photo Credit:

ஹவுஸ் மேட்ஸ் ராஜவேல்: காளி வெங்கட், வினோதினி வைத்யநாதன், தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் டி.ராஜவேல் இயக்கிய படம் ஹவுஸ் மேட்ஸ். ஃபேன்டஸி ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம்; ஆரம்பித்த கொஞ்ச நேரம் பேய் படம் போன்ற ஃபீலோடு கொண்டு சென்று; இதில் ஒரு அறிவியல் இருக்கிறது என்று ரசிகர்களை 'அட' சொல்ல வைத்தார் இயக்குநர். ஒரே படத்தில் இரண்டு விதமான ஃபீலை ரசிகர்களுக்கு கொடுப்பதே கடினம். அந்த ஃபீலை ராஜவேல் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொடுத்து அப்ளாஸை அள்ளிவிட்டார்.

Year Ender 2025 Tamil Cinema Debut Directors Shine While Big Films Struggle
Photo Credit:

குடும்பஸ்தன் ராஜேஸ்வர் காளிசாமி: மணிகண்டம், சான்வி, ஆர்.சுந்தரராஜன், சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய படம் குடும்பஸ்தன். ஒரு இளைஞன் குடும்ப தலைவனாக மாறும்போது அவனுக்கு வரும் பொருளாதார சிக்கலை எப்படி தீர்க்கிறான்; தொடர்ந்து நச்சரிப்பு கொடுக்கும் சொந்தத்தை எப்படி சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவையோடு சொல்லி கவர்ந்தார் ராஜேஸ்வர். முக்கியமாக இந்த சிஸ்டத்தில் வளைந்து கொடுத்து போனால்தான் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் இல்லை என்று பொட்டில் அடித்து சொல்லியிருந்தார். இவரும் எதிர்காலங்களில் பல சம்பவங்களை செய்வார் என்று நம்பலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்த்: சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய படம் டூரிஸ்ட் ஃபேமிலில். மனிதம் ஒன்றுதான் இச்சமூகத்தை காக்கும் கவசம் என்பதை நெகிழ்ச்சியோடு சொல்லி புருவம் உயர்த்த வைத்தார் அபி. துப்பாக்கி சத்தங்களும், ரத்தங்களும் சூழ்ந்த தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் முதல் ஒளியை பாய்ச்சியது டூரிஸ்ட் ஃபேமிலிதான். பல குடும்பங்கள் இந்தப் படத்தை கொண்டாடி மகிழ்ந்தன. மேற்கூறிய அனைவரும் வரும் காலங்களில் இதேபோன்ற தரமான படைப்புக்களை தருவதற்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக வாழ்த்துகள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X