Year Ender: 2025இல் பட்டையைக் கிளப்பிய டாப் 10 படங்கள் இதுதான்.. ஆக்‌ஷன் முதல் எமோஷனல் வரை

சென்னை: 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 280 படங்கள் வரை தமிழில் ரிலீஸ் ஆகியுள்ளது. எல்லா ஆண்டும் சொல்வது போல இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு சோதனையான ஆண்டுதான். இருப்பினும் இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதல் சோதனையான ஆண்டு. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிவிடும், ஆனால் இம்முறை பாக்ஸ் ஆபீஸில் அடி வாங்கியதே அவர்கள்தான். அந்த வகையில் கதையும் திரைக்கதையும் இருந்தால்தான் படம் ஓடும், இல்லை என்றால் ஆண்டவனே வந்தாலும் தோல்விதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் தமிழில் வெளியான படங்களில் பிலிமி பீட் தளத்தின் டாப் 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Year Ender 2025 Top 10 Tamil Films Listed By Tamil Filmibeat Good Bad Ugly To Dude
Photo Credit:

இதில் 10வது இடத்தில் டியூட் இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க, பாக்ஸ் ஆபீஸ் நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்தார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தின் கதை, ஜாலியான திரைக்கதை என மொத்த படமும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது. தீபாவளி ரிலீஸாக வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையைக் கிளப்பியது.

Year Ender 2025 Top 10 Tamil Films Listed By Tamil Filmibeat Good Bad Ugly To Dude
Photo Credit:

9வது இடத்தில் குடும்பங்கள் கொண்டாடிய மாமன் படம் உள்ளது. நடிகர் சூரியின் கதை என்றாலும், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் கோடை விடுமுறையில் வெளியானது. அக்கா - தம்பி உறவு, தாய்மாமன் பாசம், குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகள் என குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து பார்க்க ஏதுவான படமான மாமன் அமைந்தது.

8வது இடத்தில் இருப்பதும் குடும்பங்கள் கொண்டாடிய, இன்னும் சொல்லப்போனால் குடும்பஸ்தர்களாக மாறி உள்ள 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய குடும்பஸ்தன் படம். நடிகன் மணிகண்டன் நடித்துள்ளார் என்றதுமே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையை, கொஞ்சம் கூட ஏமாற்றாமல் காப்பாற்றி உள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. ஜனவரி மாதத்தின் கடைசியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.

குடும்பங்கள் கொண்டாடிய: அடுத்த இடத்தில் இருக்கும் படம் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி, விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான, கலகலப்பான குடும்ப படமான தலைவன் தலைவி தான். என்னதான் படத்தில் சண்டை போடுகிறேன் என்று கத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னாலும், இந்த படம் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட தலைவன் தலைவி டாப் 10 படங்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு தகுதியான படம் தான்.

Year Ender 2025 Top 10 Tamil Films Listed By Tamil Filmibeat Good Bad Ugly To Dude
Photo Credit:

கம்பேக்: 6வது இடத்தில் சூர்யாவுக்கு டீசன்ட்டான கம்பேக் படமாக அமைந்த ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜுமே இணைந்து படத்தை தயாரித்தார்கள். படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இந்த படம் கொடுத்த வெற்றி கருப்பு படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

பைசன்: 5வது இடத்தில் இருக்கும் படம் விமர்சன வெற்றியை ஈட்டியது மட்டும் இல்லாமல் வணிக ரீதியாக வெற்றியை ஈட்டியது தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்க, துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் படம், பெரும் வெற்றியை ஈட்டியது. தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சில இணையத்தில் கம்பு சுற்றிக் கொண்டிருக்க அவர்கள் அனைவருக்கும் பளார் விட்டு வெற்றிக் கோட்டை வெற்றிகரமாக எட்டியது. படத்தின் திரைக்கதை, இசை, வசனம், நடிகர்களின் நடிப்பு என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Year Ender 2025 Top 10 Tamil Films Listed By Tamil Filmibeat Good Bad Ugly To Dude
Photo Credit:

கூலி: அடுத்து நான்காவது இடத்தில் தனது 50வது ஆண்டு திரை வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி. படத்தின் திரைக்கதை மீது விமர்சனங்கள் இருந்தாலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியியில் வெளியான படம் இது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழி திரையுலகில் இருந்தும் முக்கிய நடிகர்களை களமிறக்கினர். நடிகர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகப்பெரிய பிளஸ்.

Year Ender 2025 Top 10 Tamil Films Listed By Tamil Filmibeat Good Bad Ugly To Dude
Photo Credit:

அஜித்: மூன்றாவது இடத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக அளவில் வசூல் குவித்த படமான அஜித்தின் குட் பேட் அக்லி. என்னப்பா ரீல்ஸா எடுத்து படத்தை நிரப்பி வைத்துள்ளார்கள், அஜித்தின் மாஸ் படங்களின் ரெபரன்ஸ் வைத்து படத்தை ஒப்பேற்றி விட்டார்கள் என என்ன விமர்சனம் வைத்தாலும், அஜித் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படம். படத்தை ஹிட் ஆக்கினால், இயக்குநர் ஆதிக்கிற்கு தங்கத்தில் செயின் பரிசளிப்பதாக மதுரை அஜித் ரசிகர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் ஆதிக்கிற்கு தாராளமாக தங்கச் செயினை பரிசளிக்கலாம்.

டூரிஸ்ட் ஃபேமிலி: இரண்டாவது இடத்தில் ஃபேமிலி ஆடியன்ஸ், சினிமா ரசிகர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் இரண்டாவது இடத்தை அலங்கரிக்க தகுதியான படம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

முதல் இடம்: முதல் இடத்தில் இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய வெற்றிப் படம் என்று கூறும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இந்த படம் கமர்ஷியல் எலமெண்ட்களால் நிரப்பப்பட்ட படம். இளைஞர்களுக்கு, ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு என மொத்த படமும் ஒரு ஹிட் பேக்கேஜ் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. இந்த 10 படங்கள் தான் 2025இல் வெளியான படங்களில் டாப் 10 என்று ஃபிலிமி பீட் வலைதளத்தால் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X