#yearender2018: மீ டூவால் கோலிவுட்டை அதிர வைத்த சின்மயி, ஸ்ருதி
சென்னை: மீ டூ புகாரால் கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது வைரமுத்து மற்றும் அர்ஜுன் பற்றி தான்.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அவர் பப்ளிசிட்டிக்காக அப்படி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பிறகு நடிகைகள் உள்பட பல துறைகளை சேர்ந்த பெண்கள் மீ டூ என்று கூறி பாலியல் புகார் தெரிவித்தார்கள்.

பாலிவுட்
தனுஸ்ரீ தத்தா புகாரை அடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. அது அப்படியே சாண்டல்வுட், மல்லுவுட், டோலிவுட், கோலிவுட் வரைக்கும் வந்தது. ஆனால் வந்த வேகத்தில் அடங்கிவிட்டது. காரணம் மீ டூ என்று கூறியவர்களுக்கு நடந்தது தான்.

வைரமுத்து
தென்னிந்திய திரையுலகில் மீ டூவால் அதிகம் பேசப்பட்டவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவும், ஆக்ஷன் கிங் அர்ஜுனும் தான். பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை தற்போது ஏன் சொல்ல வேண்டும். சின்மயி உள்நோக்கத்துடன் சிலர் தூண்டுதலின்பேரில் வைரமுத்துவை டார்கெட் செய்கிறார் என்றார்கள்.

ராதாரவி
டப்பிங் சங்க தலைவர் ராதாரவி மீதும் பாலியல் புகார் எழுந்தது. அவர் மீது புகார் தெரிவித்த பெண்களுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து சந்தா கட்டவில்லை என்று கூறி சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீ டூ விவகாரத்தால் தான் நீக்கப்பட்டதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இதை ராதாரவி திட்டவட்டமாக மறுத்தார்.

அர்ஜுன்
நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அர்ஜுன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் இந்த புகாரை மறுத்துள்ளார். அர்ஜுன் மீது புகார் தெரிவித்த பிறகு தனக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











