twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாஷ்பேக் 2018: ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய கமல் ஹாஸன்

    By Siva
    |

    சென்னை: 2018ம் ஆண்டை கமல் ரசிகர்களால் நிச்சயம் மறக்க முடியாது.

    2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாஸனின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது.

    கமலை டிவி மற்றும் பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தனர்.

    [பிளாஷ்பேக் 2018]

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2

    டிவியில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கமல் அரசியல் பன்ச் வசனங்களை பேசியதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். கமல் நடித்த விஸ்வரூபம் 2 முந்தைய பாகம் போன்று பிரச்சனைகள் இல்லாமல் வெளியானதால் உலக நாயகன் மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர். சபாஷ் நாயுடு தான் தள்ளிக் கொண்டே போகிறது.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கினார். கமல் அரசியல்வாதியாகியுள்ளது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரின் கட்சி 40 இடங்களில் போட்டியிடப் போகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கவலை

    கவலை

    கமலின் படம் ரிலீஸானது, அவர் கட்சி துவங்கியது எல்லாம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றால் இந்தியன் 2 படத்தோடு நடிப்பை நிறுத்திக் கொள்ளப் போவதாக அவர் அறிவித்தது தான் கவலை அளிக்கிறது. நடிப்பை தொடர்ந்து கொண்டே அரசியல் பண்ணலாமே ஆண்டவரே என்கிறார்கள் ரசிகர்கள்.

    2018

    2018

    2018ம் ஆண்டு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், கவலையும் கலந்த ஆண்டாக அமைந்துள்ளது. அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு நடிப்பை தொடர்ந்தால் ரசிகர்கள் நிம்மதி அடைவார்கள். கமல் தனது மனதை மாற்றிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    2018 is a mixture of happiness and sadness for Kamal Haasan fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X