Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமுத்திரக்கனி நடிப்பில், ஜெயமோகன் வசனம் எழுதும் 'ஏமாலி' டீசர் இதோ!
சென்னை : சமுத்திரக்கனி தற்போது நடித்து வரும் படம் 'ஏமாலி'. இந்தப் படத்தின் முதலாவது டீசர் சற்றுமுன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக ஹீரோ நடிக்கிறார். கதாநாயகியாக 'காதல் கண் கட்டுதே' படத்தில் நடித்த அதுல்யா ரவி நடிக்கிறார்.
மேலும், படத்தில் பால சரவணன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். 'லதா புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜெயமோகன் வசனம்
வி.இசட். துரை இயக்கும் ‘ஏமாலி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்திருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் 'ஏமாலி' படத்திற்கு இசை அமைக்கிறார்.
|
படத்தின் டீசர்
'ஏமாலி' படத்தின் முதல் டீசர் சற்றுமுன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஏமாளியா ஏமாலியா
‘ஏமாலி' என்ற தலைப்பு முன்பே சர்ச்சைக்குள்ளானது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ‘ஏமாளி' என்பதே சரியான வார்த்தை என ஒருவர் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார்.
தெரிந்தேதான் அந்தப் பெயர்
அதோடு இயக்குநர் வி.இசட்.துரைக்கும் மெஸேஜ் அனுப்பினார். அதற்கு, தெரிந்தேதான் ‘ஏமாலி' என்று பெயர் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது என்று பதில் கூறியிருக்கிறார் இயக்குனர் வி.இசட்.துரை.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!