தெலுங்குக்கு பழசு… தமிழுக்கு புதுசு… எஸ்.எஸ்.ராஜ மௌலியின் ‘விஜயன்‘ 3ந் தேதி ரிலீஸ்

சென்னை : தெலுங்கில் ஹிட்டான 'யமதொங்கா' 12 ஆண்டுகள் கழித்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு விஜயன் என்ற பெயரில் ஜனவரி 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மௌலியின் இயக்கத்தில் 2007 ஆண்டு தெலுங்கில் வெளியான படம் தான். " யமதொங்கா " இப்படம் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்திருப்பார். இப்படத்தில் இவருடன் குஷ்பு , ப்ரியாமணி , மம்தா மோகன்தாஸ், ரம்பா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

Yemadonga to release in tamil as vijayan january 3rd

கதை விஜயேந்திர பிரசாத் , மரகதமணி இசையமைத்திருந்தார் . கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர்கள் அனைவரும் நான் ஈ , பாகுபலி , பாகுபலி 2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணியாளர்கள்.

பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான 'யமதொங்கா' 12 ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் மொழியில் விஜயன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவர உள்ளது. இப்படம் ஜனவரி 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மௌலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார். இவர் முதலில் இயக்கிய படம் ஜூனியர் என்.டியாரை வைத்து 'ஸ்டூடன்ட் நம்பர் ஒன்' என்ற படத்தை இயக்கினர் இந்த படம் பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தான் ஜூனியர் என்.டி.யார் அனைவராலும் பேசப்பட்டார்.

அடுத்ததாக நடிகர் சிரன்ஜீவியின் மகன் ராம்சரணை வைத்து மகதீரா என்ற படத்தை தமிழிலும், தெலுங்கிலும் இயக்கினார் இந்த படம் வெற்றிப்படமாக அமைத்து தமிழ் நடிகர்களின் நீங்கா இடம் பிடித்தார் ராஜ மெளலி. அடுத்ததாக 'ஈகா' தமிழில் 'நான் ஈ' என்ற படத்தை தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிட்டு அசத்தினார் அந்த படமும் ஹிட். அடுத்து பாகுபலி இது ஒட்டுமொத்த இந்தியாவையும் நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட படம்.

இவர் இதுவரை 5 படங்கள் ரீமேக்காகவும் , 2 படங்கள் மொழி மாற்றம் செய்தும் , 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்திலும் வெளியானது. தமிழில் வெளிவராத ஒரே படம் 'யமதொங்கா' படம் தான். தற்பொழுது மொழிமாற்றம் செய்து தமிழில் 'ஓம் ஸ்ரீ சப்த கன்னியம்மன் கிரியேஷன் தயாரித்து , ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் மூவிஸ் வெளியிட உள்ளது.

More from Filmibeat

Read more about: director ss rajamouli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X