என் பெயர் ஆனந்தன்... உண்மைச் சம்வத்தின் அடிப்படையில் ஒரு த்ரில்லர்!

By Shankar

Recommended Video

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு திரில்லர் படம்- வீடியோ

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'என் பெயர் ஆனந்தன்'. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான '6 அத்தியாயம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான 'சித்திரம் கொல்லுதடி' அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ள ஸ்ரீதரின் இரண்டாம் படம்தான் 'என் பெயர் ஆனந்தன்'.

Yen Peyar Anandhan, a new Thriller Movie

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'தாயம்' ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 'ஏமாலி', 'காதல் கண் கட்டுதே' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

Yen Peyar Anandhan, a new Thriller Movie

இந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

Yen Peyar Anandhan, a new Thriller Movie

த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, 'என் பெயர் ஆனந்தன்' படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார். சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளின் பின்னணியில் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Yen Peyar Anandhan, a new Thriller Movie

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X