»   »  ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல... சத்தியமா இது ஒரு படத்தோட பேர்தாங்க!

ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல... சத்தியமா இது ஒரு படத்தோட பேர்தாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர்கள் தங்களது படத்திற்கு பெயர் வைத்ததும், அது ஏற்கனவே நாங்கள் பதிவு செய்த தலைப்பு என ஆளாளுக்கு போர்க்கொடி தூக்குவது வழக்கமாகி விட்டது. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் தலை விரித்தாடுகிறது எனலாம்.

இதனாலேயே படத்திற்கு சகட்டு மேனிக்கு விதவிதமாய் பேர் வைப்பதை புதிய டிரெண்டாக்கி இருக்கிறார்கள் சில இயக்குநர்கள்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான், யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை என இதற்கு உதாரணங்கள் பல.

ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல...

ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல...

அந்தவகையில் தற்போது வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. தலைப்பு ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல' என்பதாகும். தலைப்பைக் கேட்டாலே சும்மா சிரிப்பு அள்ளுதுல.

நாயகனாக அஸார்...

நாயகனாக அஸார்...

இப்படத்தின் நாயகனாக ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே விக்ரமனின் நினைத்தது யாரோ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இரண்டு படங்கள்...

இரண்டு படங்கள்...

அப்படம் அவ்வளவா சொல்லிக் கொள்ளும்படி ஓடாததால், நடிகரின் பெயர் வெளியில் வரவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் அஸார். இரண்டிலும் அஸார் மட்டுமே சோலோ ஹீரோ.

காமெடி படம்...

காமெடி படம்...

இந்த இரண்டில் ஒரு படம் தான், ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல'. இது முழு நீள காமெடிப் படமாம்.

காதல்...

காதல்...

கதை மிகவும் சிம்பிள் தான். ஹீரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனா, படம் முடியர வரை ஹீரோவுக்கு ஒரு பொண்ணு கூட செட்டாகாதாம்.

இரண்டு நாயகிகள்...

இரண்டு நாயகிகள்...

இந்தப் படத்தில் அஸாருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி, இன்னொருத்தர் ஈடன். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்குக்கிறார்.

அடுத்து, ஏண்டா பல்லு வெளக்குனியா, அப்புறம் மச்சான் டீ குடிக்கலாமா.. இப்படில்லாம் கூட படம் வந்தாலும் வரலாம் பாஸ்...!

English summary
Yenda thalaila ennai vekkala is an upcoming Tamil film directed by Vignesh Karthick.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil