வெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ: விஜய் ராசி சிவாவுக்கு ஒர்க்அவுட் ஆகுமா?

By Siva

Recommended Video

Sk-16 First Look : நம்ம வீட்டு பிள்ளை | Sivakarthikeyan | Filmibeat Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் எங்க அண்ணன் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கிறார்.

Yenga Annan lyrical video is here

இந்நிலையில் அண்ணன், தங்கை இடையேயான பாசத்தை தெரிவிக்கும் எங்க அண்ணன் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இமான் இசையில் வெளியாகியுள்ள அந்த வீடியோ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

வா வா டியரு பிரதரு, பார்த்தா சிதறும் சுகரு, அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவரு என்று துவங்கும் அந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

அந்த பாடலில் வரும், அடுத்த ஜென்மம் கூட நீதான் எனக்கு அண்ணன் அக்ரிமென்ட போட்டுக்கலாம், அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்குறதுல மன்னன் என்ற வரிகள் சிவகார்த்திகேயன் தங்களுக்காக பயன்படுத்தியதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

வீடியோவில் சிவகார்த்திகேயனையும், ஐஸ்வர்யாவைும் அண்ணன் தங்கையாக பார்க்க நன்றாக உள்ளது. வழக்கமாக அண்ணன் தங்கை சென்டிமென்ட் விஜய்க்கு நன்றாக கை கொடுக்கும். விஜய்யின் அந்த ராசி சிவகார்த்திகேயனுக்கும் ஒர்க்அவுட்டாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் வழியில் குட்டீஸ்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிவா. இந்நிலையில் நம்ம வீட்டுப் பிள்ளை படம் நிச்சயம் அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம். மீண்டும் பழைய சிவாவாக திரும்பி வருவார் என்று நம்புவோமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X