விவகாரமான போட்டோவை காட்டி மிரட்டுகிறார்..பார்வதி நாயர் புகார்..வேலைக்காரர் கைது!

சென்னை : விவகாரமான போட்டோவை காட்டி மிரட்டுவதாக நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில் சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.

அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயர் கடந்த அக்டோபர் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வீட்டில் வேலை செய்த வேலைக்காரர் சுபாஷ் சந்திர போஸ் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த புகாரில், வீட்டிலிருந்த ரூ9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள், ரூ1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன், ரூ2 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பை திருடிச்சென்றுவிட்டதாக கூறியிருந்தார். நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பார்வதி நாயர் பொய் சொல்கிறார்

பார்வதி நாயர் பொய் சொல்கிறார்

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் அளித்தார். பார்வதி நாயர் சொல்வது போல நான், அவர் வீட்டில் எந்த பொருளையும் திருடவில்லை என்றும், அவர் ஆண் நபர்களுடன் மது போதையில் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்டதால், என் மீது அநியாயமாக பழி சுமத்துவதாகவும், மேலும், பார்வதி நாயர் தான் என்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியிருந்தார்.

ஆபாசமாக பேசுகிறார்

ஆபாசமாக பேசுகிறார்

இதையடுத்து நடிகை பார்வதி நாயர் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் அளித்திருந்தார்.அதில், தன் வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி ஆபாசமாக பேசி வருவதாகவும், என்னுடைய அந்தரங்க போட்டோவை வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் இதனால், சுபாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

வேலைக்காரர் அதிரடி கைது

வேலைக்காரர் அதிரடி கைது

நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் பார்வதி நாயர் வீட்டின் வேலைக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் மீது கொலை மிரட்டல், பெண்னை மானபங்கம் செய்தல்,தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.

More from Filmibeat

Read more about: parvathy nair கைது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X