மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகிறதா என்னை அறிந்தால்?
என்னை அறிந்தால் படம் வரும் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சொல்லிக் கொண்டிருக்க, படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக மீடியாவில் செய்தி வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் - அனுஷ்கா- த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் முடியாமலிருந்ததால் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்தனர்.
இப்போது படம் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்கு போதுமான அரங்குகள் கிடைக்க கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இப்படி தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இதுகுறித்து ஏ எம் ரத்னம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
Comments


Click it and Unblock the Notifications
