»   »  ‘என்னம்மா இப்டி ப(பி )ண்றீங்களேம்மா’...

‘என்னம்மா இப்டி ப(பி )ண்றீங்களேம்மா’...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிமுருகன் படத்தில் வரும் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா பாடல் படமாக்கப் பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் அதே குழு அடுத்ததாக இணைந்திருக்கும் படம்தான் ரஜினி முருகன். இந்தப் படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கி உள்ளார். இமான் இசையமைத்து உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியானது. அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.


என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

அதேபோல், ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' பாடல், படமாக்கப் பட்ட வீடியோ ஒன்று யூடியூப்பில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.


ரஜினி முருகன்...

ரஜினி முருகன்...

லட்சுமி ராமகிருஷ்ணனால் சொல்லப் பட்டு நெட்டிசன்கள் வாயில் அவலாக அகப்பட்ட வார்த்தை ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா'. தற்போது இதை வைத்து பாடல் வெளியானால் சும்மா இருப்பார்களா?


ஷூட்டிங்...

ஷூட்டிங்...

இந்த வீடியோவில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இமான் பாடும் காட்சிகள், மற்றும் பாடல் படமாக்கப் பட்ட விதம் ஆகியவை உள்ளன.


டப்ஸ்மாஷ்...

டப்ஸ்மாஷ்...

அதுமட்டுமின்றி டப்ஸ் மாஷில் இந்த வீடியோவிற்கு திரை நட்சத்திரங்கள் தங்கள் அபிநயங்களைப் பதிவு செய்ததையும் சேர்த்து கலக்கலாகக் கொடுத்திருக்கிறார்கள். நடிகர்கள் அனிருத், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மட்டுமின்றி, நடிகை ஸ்ரீதிவ்யாவும் டப்ஸ்மாஷில் இப்பாடலுக்கு வாயசைத்துள்ளார்.


கீர்த்தி சுரேஷ்...

கீர்த்தி சுரேஷ்...

படத்தில் தந்தைக்காக நாயகி, காதலை உதறும் காட்சியில் நாயகன் பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இப்படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ், ‘நெற்றிக்கண்' பட நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னுறீங்களேம்மா...

இப்போதெல்லாம் படம் ரிலீசாகி தியேட்டர்களில் எத்தனை நாள் ஓடியது என்பதற்கு வெற்றி விழா எடுப்பது போல, இணையத்தில் வெளியாகும் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்கள் தரும் லைக்ஸ்க்கும் விழா எடுக்கலாம் போல.


என்னம்மா இப்டி ப(பி)ண்றீங்களேம்மா...English summary
Rajini Murugan is an upcoming Tamil comedy drama film directed by Ponram, who made his debut with Varuthapadatha Valibar Sangam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos