ஆசை ஒரு சூன்யக்காரி என்று சொல்லி ... 1 மில்லியன் பார்வைகளை கடந்த எண்ணித் துணிக டீசர்

சென்னை: ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் வெளியான, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள "எண்ணித் துணிக" படத்தின் டீசர், YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோக தளத்திலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நடிகர் ஜெய்யின் நடிப்பு, இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை, தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங் அனைத்தும் இணைந்த, இந்த டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டு வருகின்றனர்

திட்டமிட்டு வருகின்றனர்

டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். எண்ணித் துணிக படத்தை S.K.வெற்றி செல்வன் எழுதி இயக்கியுள்ளார். Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஆடியோ உரிமையை

ஆடியோ உரிமையை

ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சாம் CS இசையமைக்கிறார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், மற்றும் V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.Think Music நிறுவனம் எண்ணித் துணிக படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது, விரைவில் இசை ஆர்வலர்களுக்கு சாம் CS உடைய மெஹா ஹிட் பாடல்களை வழங்கவுள்ளது.

பயன்படுத்திய விதம்

பயன்படுத்திய விதம்

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "" என்ற திருக்குறளின் வரிகளை படத்தின் தலைப்பில் பயன்படுத்திய விதம் மிகவும் பாராட்ட தக்கதாக பல இயக்குனர்களும் ரசிகர்களும் சொல்லி வருகின்றனர். எந்த விஷயத்திலும் இறங்கும் முன் யோசித்து இறங்க வேண்டும். இறங்கிய பின் யோசனை செய்வது தவறு என்பது தான் இந்த குறளின் அர்த்தம். துப்பாக்கி சத்தம், துரத்தி பிடிப்பது, அதுல்யாவின் கண்கள், பயம் கொண்ட பார்வை என்று நிறைய காட்சிகள் மிரள வைக்கிறது. படத்தின் தலைப்பு அருமை.. இது போன்ற தமிழ் தலைப்புடன் படம் வருவது தமிழுக்கும், தமிழ் சினிமாவிற்கும் சிறப்பு என்று கம்மெண்ட்ஸ் செக்ஷனில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர் .

ஆசை ஒரு சூன்யக்காரி

ஆசை ஒரு சூன்யக்காரி

இந்த டீசரில் வரும் வாய்ஸ் ஓவர் யாருடையது என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது . நடிகர் சூர்யாவின் வாய்ஸ் என்றும், காஸ்மோரா ராஜ்நாயக் குரல் போல் உள்ளது என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஆசை ஒரு சூன்யக்காரி என்று வாய்ஸ் துவங்கும். டீசர் முடியும் வரை சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X