ஆமாங்க, பப்ளிசிட்டிக்குதான் இதை எல்லாம் பண்றேன்.. அதுல என்ன தப்பு? பிரபல நடிகை ஜிவ்வ்வ்!
ஐதராபாத்: நான் விளம்பரம் தேடுகிறேன் என்பதை மறுக்கவில்லை என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ஆம்பள படத்தில் நடித்திருந்தவர் மாதவி லதா.
தெலுங்கு நடிகையான இவர், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாததால், இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

போதை பார்ட்டி
ஆந்திராவில் நடந்த பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில், குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் தோற்றாலும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் பெங்களூரை போல தெலுங்கு சினிமாதுறையிலும் போதைப் பொருள் பார்ட்டிகள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

சர்வ சாதாரணம்
இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 'தெலங்கானா போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டோலிவுட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்களோடு நடக்கும் பார்ட்டிகள், இங்கு சர்வ சாதாரணம். அதை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆபாசமாக
இந்நிலையில், இவர் சைபராபாத் போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை சிலர் ஆபாசமாக சித்தரித்துள்ளதாகவும் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மார்பிங் போட்டோ
இதுபற்றி மாதவி லதா கூறும்போது, ஆந்திராவில் கோயில்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காகக் குரல் கொடுத்தேன். இதற்கு பிறகு முகம் தெரியாத சிலர், வெறுக்கத்தக்க கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எனது புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்தி
இந்நிலையில் இதை எல்லாம் பரபரப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் மாதவி லதா செய்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதுபற்றி அவர் கூறும்போது, ஆமாம். பப்ளிசிட்டிக்காகவும் பரபரப்புக்காகவுமே இதை செய்கிறேன். மீடியாக்களில் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கத்தான் இதை பண்ணுகிறேன்.

என்ன தவறு?
நான் விளம்பரம் தேடுகிறேன் என்பதை மறுக்கவில்லை. எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கவனத்தை ஈர்க்க இதை செய்கிறேன். நான் சமூக சேவை மற்றும் உதவிகள் செய்யும்போது, அது மீடியாவில் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதைப் பார்த்து மற்றவர்களும் அதை செய்வார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











