இசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்
Recommended Video
சென்னை: அண்ணனின் இசையை சுட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் வந்த ஒரு காதல் என்பது பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ராஜா சார் பாடல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இது ராஜா சார் இசையமைத்தது இல்லை கங்கை அமரன் என்றார்கள்.
இப்படி ஒரு பெரிய விவாதம் நடக்க ஒருவரோ எதற்கு பிரச்சனை கங்கை அமரனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் ட்விட்டரில் கேட்டார்.
கங்கை அமரன்
ஒரு காதல் என்பது பாடலுக்கு யார் இசையமைத்தது என்ற கேள்விக்கு, இல்லை அது இளையராஜா அவர்கள் வேறு படத்துக்காக பதிவு செய்தது .. அதை நான் சுட்டு எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
இசை திருட்டு
அண்ணன் இசையை சுட்டதை ஒப்புக் கொண்ட கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இது பற்றி தங்களின் கல்லூரி நாட்களில் பேசியதாக தெரிவித்தார்.
குடும்ப சொத்து
நான் சுட்டது எல்லாமே அவருடையதுதான் அது எங்கள் குடும்ப சொத்து .... என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
பாராட்டு
அடுத்தவரின் இசையை சுட்டுவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்வதற்கும் பெருந்தன்மை வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். சுட்டுவிட்டு இன்ஸ்பையர் ஆனேன் என்று சொல்லாத கங்கை அமரனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











