குறளரசன் இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?: உண்மையை சொன்ன டி.ராஜேந்தர்
Recommended Video

சென்னை: தன் மகன் குறளரசன் இஸ்லாத்திற்கு மாறியதை உறுதி செய்துள்ளார் டி. ராஜேந்தர்.
இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தனது அண்ணன் சிம்புவின் இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார். தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் பெற்றோருடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அவர் மதம் மாறியபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
சிம்பு தம்பி மதம் மாறிவிட்டாரா என்று பலரும் வியப்படைந்தனர். ஆனால் குறளரசனோ வேண்டுதலுக்ககாக தர்காவுக்கு சென்றதாக தெரிவித்தார். இது குறித்து டி. ராஜேந்தரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
ஆமாம், என் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். எங்களுக்கு எம்மதமும் சம்மதமே. அதனால் என் மகனின் முடிவை மதிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











