For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்’..அசீம் இப்படியா? பச்சோந்தி கெட்டது..கமல் இன்று வச்சி வெளுப்பாரா?

  |

  பிக்பாஸ் வீட்டில் 2 வாரம் வில்லன், 2 வாரம் நல்லவன், மீண்டும் வில்லத்தனம் அசீமின் உண்மையான முகம் எது.

  மாலையில் விக்ரமனுடன் மீண்டும் நட்புக்கரம், இரவில் புறம் பேசுவது. பச்சோந்தி கெட்டது போங்க என அசீமை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  அசீமின் இந்த திடீர் மாற்றத்தை வாராவாரம் ஆரவாரம் செய்யும் கமல் இதை கண்டிப்பாரா? என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்..ஷாக்கான ரசிகர்கள்!இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்..ஷாக்கான ரசிகர்கள்!

  சீசன் 1-ல் கலக்கிய கமல்

  சீசன் 1-ல் கலக்கிய கமல்

  பிக்பாஸ் சீசன் ஒன்றில் வந்த போட்டியாளர்கள் மிகப்பிரபலமான நடிகர் நடிகைகள், மேல்தட்டில் உள்ளவர்கள். பிக்பாஸ் புதுசு என்பதால் போட்டியாளர்களும் தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தினர். அந்த சீசனில் ஓவியா பாதிக்கப்பட கமல் டெர்ராக தன்னை வெளிப்படுத்தினார். குறும்படம் போட்டு பலரது சங்கை அறுத்தார். கமல்ஹாசனிடம் சிக்கி சின்னாபின்னமான பலர் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அடுத்தடுத்த சீசன்களை மக்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கினர்.

  சீசன் 5-ல் குழுமிய மிக்சர் பார்ட்டிகள்

  சீசன் 5-ல் குழுமிய மிக்சர் பார்ட்டிகள்

  ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் ஆட்கள் கிடைக்காததால் விஜய் டிவி ஆட்களை உள்ளே இறக்க பிக்பாஸ் களையிழக்க ஆரம்பித்தது. அதிலும் சீசன் 5 போன்ற மிக்சர் பார்ட்டிகளை பார்த்து மக்கள் கடுப்பானார்கள். மிக்சர் பார்ட்டி ஒருவரே சீசன் ஆரம்பத்திலிருந்தே வெல்வார் என கூறப்பட்டதால் சுவாரஸ்யம் குறைந்தது. தாமரை என்கிற கேரக்டர் இல்லாவிட்டால் பிக்பாஸ் கதை முடிந்திருக்கும். இதை வைத்து சீசன் 6 ஐ வேற மாதிரி லெவலில் பிக்பாஸ் நடத்துகிறார். கமல் நுணுக்கமாக கவனித்து வெளுத்து வாங்குகிறார்.

  வெளுத்து வாங்கும் கமல்

  வெளுத்து வாங்கும் கமல்

  இல்லாவிட்டால் அசீம், தனலட்சுமி போன்றவர்களை சமாளிப்பது மிக கடினம். பிக்பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் என விக்ரமனை மற்றவர்கள் பேசுவதால் எண்ணத்தில் இடிவிழுந்த அமுதவாணன் ஒருபக்கம், அமுதவாணனை சுயபுத்தி இல்லாமல் ஆக்கும் ஜனனி ஒருபக்கம், ஒருவாரம் வில்லன், இரண்டாம் வாரம் கடுமையான வில்லன், மூன்று நான்காவது வாரத்தில் மிக மிக நல்லவனாக கமல் கண்டிப்பால் மாறிய அசீம், கண்டபடி ஆடிய தனலட்சுமி என பிக்பாஸ் வீடு களைக்கட்டியது.

  ஆனால் அசீமின் நடத்தை மிக மோசமாக மாறியுள்ளது. 2 வாரத்திற்கு ஒருமுறை நல்லவன் கெட்டவனாக மாறுகிறார் என்றால் இவர் இயல்பு என்ன என வீட்டில் உள்ளவர்களே விமர்சிக்கின்றனர். இடையில் அசீம் மாறியதால் நெருக்கம் காட்டிய விக்ரமன் நொந்துபோனார். என்ன மனிதர் இவர் சக மனிதனை கேவலமாக பேசுகிறவர் என விக்ரமன் நொந்துபோய் சொன்னார். ஏடிகே நெருங்கிய நண்பராக இருந்தவர் அவரையும் கடுமையாக பேசி அவரும் வெறுத்துப்போனார்.

  விக்ரமனுக்கு மீண்டும் தூண்டில் போட்ட அசீம்

  விக்ரமனுக்கு மீண்டும் தூண்டில் போட்ட அசீம்

  இந்நிலையில் டாஸ்க் எல்லாம் முடிந்த மாலை கையில் இரண்டு டீ கோப்பைகளுடன் வந்து பிரதர் டீ குடிங்கன்னு விக்ரமனிடம் கொடுக்க அவர் வேண்டாம்னு மறுக்க, பிடிங்க பிரதர்னு கெஞ்ச ஓவனில் வைத்துவிடுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன்னு விக்ரமன் தவிர்த்துவிட்டார். அடடே சனிக்கிழமை வருவதால் சமாதானமா என ஹவுஸ்மேட்ஸ் நமுட்டு சிரிப்பு சிரித்த நிலையில் நள்ளிரவில் அமுதவாணன் - ஜனனி & கோ வுடன் இணைந்து விக்ரமன் அவன் அப்படி இப்படி, என் கிட்ட இப்படி பேசினான் அப்படி பேசினான் என ஒருமையில் பேசிக்கொண்டிருந்தார். உடன் தனலட்சுமியும் சேர்ந்து நாயனம் வாசித்துக் கொண்டிருந்தார்.

  நுணுக்கமாக கவனிக்கும் கமல்..வச்சி வெளுப்பாரா?

  நுணுக்கமாக கவனிக்கும் கமல்..வச்சி வெளுப்பாரா?

  தனலட்சுமி ராஜா, ராணி டாஸ்க்கில் கொஞ்சம் நல்ல பெயர் சம்பாதித்தார் அல்லவா அதை கரைக்கணுமே. அமுதவாணன் ஜனனி மீது கொண்ட கிரஷ் காரணமாக சுய தன்மையை இழந்து விக்ரமன் விக்ரமன் என நியாயத்துக்கு எதிராக பேசி வருவதை காண முடிகிறது. இவை அனைத்தையும் அத்தனை கேமரா கண்களும் கவனிப்பதை மறந்து விட்டது இந்த கும்பல். நள்ளிரவில் ரகசிய கூட்டம் ஒரு மணி நேர ஒளிபரப்பில் வராமல் இருக்கலாம். ஆனால் லைவ் காட்சியில் மற்றவர்கள் பார்ப்பார்கள் அல்லவா?

  English summary
  Villain for 2 weeks, Hero for 2 weeks, villain again in Bigg Boss house What is Aseem's real face? Friendship again with Vikraman in the evening, chatting away at night. Netizens are criticizing Asim saying that bad like chameleon. Will Kamal condemn this sudden change of Aseem this week? Netizens ask.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X