கொரொனா லாக்டவுன் காரணமாக மன அழுத்தம்.. பழம்பெரும் நடிகை 'வசந்த மாளிகை' வாணிஶ்ரீ மகன் தற்கொலை

By

சென்னை: பிரபல நடிகை வாணிஶ்ரீயின் மகன் தற்கொலை செய்துகொண்டார்.

Recommended Video

Veteran Actress Vanisri Lost her son Venkatesh Karthick | MGR, Shivaji

பழம்பெரும் நடிகை வாணிஶ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் கண்ணதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

வசந்த மாளிகை

வசந்த மாளிகை

இவர் தமிழில், ஊருக்கு உழைப்பவன், தாலியா சலங்கையா, நல்லதொரு குடும்பம், சிவகாமியின் செல்வன், காதலித்தால் போதுமா? வசந்தமாளிகை, புண்ணியபூமி உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் ஹிட் படங்கள். சிவாஜியின் 'வசந்த மாளிகை' படத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களால் என்றும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

பேராசிரியர்

பேராசிரியர்

எழுபதுகளில் முன்னணி நடிகராக இருந்த இவர், டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன், அபிநய வெங்கடேஷ் கார்த்திக் (36) பெங்களூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இவர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக, அவர் நுங்கம்பாக்கம் வீட்டுக்குச் செல்ல முடியாமல், தனது தந்தையுடன் திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள வீட்டில் தனது தந்தை கருணாகரனுடன் தங்கி இருந்தார்.

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X