கொரோனா அறிகுறி.. யாரும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். அந்த ஹீரோவிடம் உதவி கேட்கும் முன்னாள் ஹீரோயின்!

By

சென்னை: தனக்கு யாருமே உதவி செய்வதில்லை என்பதால், அந்த ஹீரோ பண உதவி செய்ய வேண்டும் என்று பிரபல நடிகை கேட்டுள்ளார்.

சல்மான் கான், திவ்யா தத்தா நடித்த இந்தி படம், வீர்கடி (Veergati). இதில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் பூஜா தட்வால்.

கே.கே.சிங் இயக்கி இருந்த இந்த படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இன்னும் சில படங்களில் நடித்தார் பூஜா தட்வால்.

பொருளாதர நெருக்கடி

பொருளாதர நெருக்கடி

ஆனால், அந்த படங்கள் சரியாக ஓடாததால், பூஜாவுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. பின்னர் டி.வி சிரீயலில் நடித்தார். ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக நடிப்பை விட முடிவு செய்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வாழ்க்கை இல்லையே. குடும்பத்தில் பல பிரச்னைகள். இதனால் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. வேலைக்காக அமெரிக்கா சென்றார்.

அசிஸ்டென்ட் மானேஜர்

அசிஸ்டென்ட் மானேஜர்

அங்கு கேஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய பூஜா, பிறகு கோவா திரும்பினார். அங்குள்ள கேசினோ ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. அதற்குச் சிகிச்சை பெற தொடங்கினார். அதிகமாக பணம் தேவைப்பட்டது. தகவல் அறிந்து, நடிகர் சல்மான் கானின் பியூங் ஹியூமன் அமைப்பு உதவி இருக்கிறது.

உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

இந்நிலையில் இப்போது சல்மான் கான் மீண்டும் தனக்கு உதவவேண்டும் என்று கேட்கிறார் பூஜா பட்வல். இதுபற்றி அவர், ஒவ்வொரு நாளும் அன்றாட தேவைகளுக்கே போராட வேண்டி இருக்கிறது. என் அக்கம் பக்கத்து வீடுகளில் நான்கு பேருக்கு கொரோனா இருக்கிறது. எனக்கும் அந்த அறிகுறி தெரிகிறது.

சந்திக்க விருப்பம்

சந்திக்க விருப்பம்

காய்ச்சல் இருக்கிறது. எனக்கு யாரும் உதவ மறுக்கிறார்கள். அதனால் நடிகர் சல்மான்கான் தான் மீண்டும் பண உதவி செய்யவேண்டும். அவரிடம் அடிக்கடி உதவி கேட்பதை தவறாக நினைக்கவில்லை. அவரை நான் வணங்குகிறேன். அவரைச் சந்திக்க விரும்புகிறேன். உடல்நிலை சரியானதும் அவருடன் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன் பூஜா அளித்த பேட்டியில், காசநோய் காரணமாக, மும்பை சவேரியில் உள்ள மருத்துவமனையில் 2018 ஆம் ஆண்டு 6 மாதம் சிகிச்சை பெற்றேன். என் கண் முன்னால் 9 இறப்புகளை பார்த்தேன். அது என்னை உலுக்கியது. அப்போது நடிகர் சல்மான் கான் எனக்கு உதவினார். இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்.

அக்கறை காட்டி

அக்கறை காட்டி

இது சல்மான் கானால் கிடைத்தது. அவர் உதவி செய்திருக்காவிட்டால், என் இருப்பை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். என் இறப்பு பற்றி கூட யாரும் அக்கறை காட்டி இருக்க மாட்டார்கள். நான் அவர் காலில் விழ வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக என் வாழ்க்கையை மீட்டு வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X