twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த 48 வருட பழக்கம்.. கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளி வைத்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்!

    By
    |

    சென்னை: தனது 48 வருட வழக்கத்தை பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கொரோனாவால் தள்ளி வைத்திருக்கிறார்.

    Recommended Video

    ஏசுதாஸ் இசையமைத்த ஒரே படம் | JAYANTHI KANNAPPAN CHAT PART-02 | REWIND RAJA EP-05|FILMIBEAT TAMIL

    பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். பல்வேறு மொழிகளில் ஏராளமானப் பாடல்களை பாடியிருக்கிறார்.

    சிறந்த பாடலுக்காக, எட்டு முறை தேசிய விருது பெற்றவர், இசை ஜாம்பவான் கே.ஜே. யேசுதாஸ்.

    ஹரிவராசனம்

    ஹரிவராசனம்

    மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனைப் படைத்தவர். திரையுலகில், 1960-ஆம் வருடம் தனது இசைப் பயணத்தை தொடங்கிய யேசுதாஸ், பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான்.

    குவிந்து வருகிறது

    குவிந்து வருகிறது

    பிரபல பாடகரான அவருக்கு இன்று 81 வது பிறந்த நாள். இதையடுத்து பின்னணி பாடகர்களும் இசை ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    மூகாம்பிகை கோயில்

    மூகாம்பிகை கோயில்

    கே.ஜே.யேசுதாஸ், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்கு அம்மன் பாடலைப் பாடி இசைக் கச்சேரியும்
    நடத்துவார். கடந்த 48 வருடமாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் அவர் அங்கு செல்ல வில்லை.

    டல்லாஸில் பூஜை

    டல்லாஸில் பூஜை

    கொரோனா பரவல் அதிகரிப்பாலும் கொரோனா கட்டுப்பாடுகளாலும், அவர் மூகாம்பிகை கோயிலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு டல்லாஸ் பகுதியில் இருக்கும் ஜேசுதாஸ், தனது வீட்டில் இருந்தபடியே பூஜை செய்கிறார்.

    பிரம்மாண்ட ஸ்கிரீன்

    பிரம்மாண்ட ஸ்கிரீன்

    பிறகு வீடியோ மூலம் அவர், அம்மன் பாடல் பாடுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக மூகாம்பிகை கோயிலின், சரஸ்வதி மண்டபத்தில் பிரம்மாண்ட டிவி ஸ்கிரீன் அமைக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் தனது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு கே.ஜே.யேசுதாஸ் குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு வந்திருந்தார்.

    English summary
    Singer KJ Yesudas will not be able to visit Kollur Mookambika temple on his birthday this year. He has been offering musical tribute at the temple on his birthday continuously for 48 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X